கோடிக்கணக்கான கிரிகெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த சச்சின் டெண்டுல்கர் இன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார். 16 வயதில் இந்திய அணியில் களமிறங்கிய சச்சின், 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் சாதித்து, வெற்றியுடன் வெளியேறிய போது, மைதானமே எழுந்து நின்று விடை கொடுத்தது. ரசிகர்கள் குறித்து சச்சின் கூறுகையில், உலகின் பல இடங்களிலும் எனக்கு ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கும் உள்ளார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது," சச்சின்... சச்சின்...' என்ற குரல், எனது இறுதி மூச்சு உள்ளவரை, காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும்,'' என்றார். 100 சதங்கள் அடித்த இவரது வசமுள்ள சாதனைகளை முழுவதும் எழுத இன்னும் 1000 பதிவுகள் எழுதினாலும் தீராது. தனது ஆட்டத்தின் ஆட்டத்தின் மூலம் நம் எல்லோரையும் சந்தோஷம் கொள்ளசெய்த அவருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து விடைகொடுப்போம்
கடைசி இன்னிங்க்ஸ்
கண்ணீருடன் சக வீரர்களுக்கு பிரியாவிடை
ரசிகர்கர்களுக்கு பிரியாவிடை
பாரத் ரத்னா சச்சின் டெண்டுல்கர் புகழ் கிரிகெட் உள்ளவரை நிலைத்திருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது