இணையத்தில் படித்த ஒரு நகைச்சுவை.ஒரு பிரபல இருதய அறுவை சிகிச்சை மருத்துவர், பழுதுபார்க்க கொடுத்திருந்த தனது வாகனத்தை திருப்பி எடுப்பதற்காக மெக்கானிக் ஷெட்டுக்கு வந்திருந்தார்.அவரை அடையாளம்கண்டவுடன் அங்கிருந்த ஒரு மெக்கானிக் அவரிடம் சென்று "டாக்டர் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்றான். சற்றே ஆச்சரியத்துடன் டாக்டர் சம்மதித்தார். அவன் உடனே "இங்க இருக்கும் வண்டிகளில் உள்ள எஞ்சினும் மனிதனின் இதயம் போன்றதுதான்.இதயத்தை கிழித்து ரத்தக்குழாய்களின் அடைப்பை நீக்கி,தேவைப்பட்டால் வெட்டி நீக்கி தையலிட்டு இணைத்து அதை மீண்டும் ஒரு புதிய இதயம் போல் நீங்கள் இயங்க செய்கிறீகள்.நானும் அதேபோல் என்ஜினில் பழுதடைந்த உதிரிபாகங்களை மாற்றி பொருத்தி புதிய எஞ்சின் போல மாற்றுகிறேன். நீங்களும் நானும் ஏறக்குறைய ஒரே வேலையை செய்தாலும் நீங்கள் என்னைவிட அதிகம் பணம் வாங்குகிறீர்களே இது நியாயமா..?" என்று கேட்டான். டாக்டர் பொறுமையாக அவன் அருகில் வந்து, நீ சொல்வதெல்லாம் சரி தம்பி, ஆனால் எஞ்சின் இயங்கிக்கொண்டிருக்கும் போதே உன்னால் இந்த வேலைகளை செய்யமுடியுமா?" என்று கேட்டார். டாக்டரின் பதிலில் பொதிந்திருந்த உண்மையை உணர்ந்த மெக்கானிக் தலையை குனிந்தான்.
இனி விஷயத்துக்கு வருவோம். இருதயம் துடிப்பை நிறுத்துகிறது. மூளை வேலையை நிறுத்துகிறது. உடம்பில் ஒரு சொட்டு இரத்தம்கூட மிச்சமில்லை. பதிலாக இரத்த குழாய்களில்,தமனிகளில் குளிர்ந்த உப்புநீர் நிறைந்து நிற்கிறது. மருத்துவ சொல்லாடலில் இந்த நிலையினை மரணம் என்று சொல்லுவர். ஆனால் நவீன மருத்துவம் இதனை உறைநிலை உறக்கம் என்று சொல்கிறது. உயிருக்கு சற்று நேரம் மட்டும் ஒய்வு. சில மணி நேரத்திற்கு பின் தமனிகளில் உள்ளஉப்புநீரை வெளியேற்றி மீண்டும் இரத்தத்தை செலுத்திய பின் இதயம் மீண்டும் துடிக்க தொடங்குகிறது. மூளை தன் வேலைகளை தொடர்கிறது.ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனிதனுக்குள் உயிர்வந்து குடிகொள்கிறது.
பழைய தமிழ் திரைப்படம் ஒன்றில் "காயமே இது பொய்யடா. வெறும் காற்றடைத்த பையடா" என்று ஒரு
பாடல் உண்டு. அமெரிக்க டாக்டர்கள் அந்த பாட்டை கேட்டு இந்த ஐடியாவ யோசிச்சிருப்பாங்களோ......?
ஆய்வு சிறக்கட்டும்...
பதிலளிநீக்குநல்லதொரு தகவலுக்கு நன்றி...