ஒரு டிராபிக் போலிஸ், பைக் ஓட்டி வந்தவனை நிறுத்தி கேட்டார்.
"ஹெல்மெட்ட விட தொப்பிதான் சார் சேப்டி, அதான் சார்"......
"இன்னா ஜோக்கா?....என்கிட்டயேவா?........"
"சார்..நெசமாத்தான் சொல்றேன்...பத்தாவது மாடியில இருந்து ஹெல்மெட்ட போட்டு பார்த்தேன். துண்டு துண்டா ஒடஞ்சிச்சு. அப்புறம் தொப்பிய போட்டு பார்த்தேன் உடையவே இல்லை. அப்ப தொப்பிதானே சேப்டி........"
*************
பையன்: "அப்பா, உனக்கு அல்ஜிப்ரா கணக்கு தெரியுமா?"......
அப்பா : "எனக்கு அல்ஜிப்ரா கணக்கு பத்தி எதுவும் தெரியாதுடா"....
கொஞ்ச நேரம் கழிச்சு......
பையன்: "அப்பா, நீராவி எஞ்சின் எப்படி இயங்குது?".......
அப்பா : "அடடே...எஞ்சின் பத்தி நான் படிச்சதே இல்லையே.....சாரிடா....
பையன்: "முதல் பானிபட் போர் எப்போ நடந்தது?..........
அப்பா : "பானிபூரிக்கு.... போரா?..சத்தியமா எனக்கு தெரியாதுடா......
பையன்: "கேள்விமேல கேள்வியா கேட்டு தொல்லை பண்ணினதுக்கு சாரிப்பா...".
அப்பா : "எதுக்கு சாரியெல்லாம் சொல்லுற...இப்பிடியெல்லாம் கேள்வி கேக்கலன்னா நீ எதுவும் கத்துக்கவே முடியாது. தெரியுதா....."
*************
ஆபீசர்: சார்..... ஒருத்தர் உங்களை பார்க்க வந்திருக்கார்.
கல்வி அமைச்சர்: யாரு?
ஆபீசர் : உங்க ஸ்கூல் வாத்தியார்னு சொன்னாரு....
கல்வி அமைச்சர்: உடனே அவனை கைது பண்ணுங்க. அவன் பொய் சொல்றான். நான் ஸ்கூலுக்கே போனதில்ல.
*************
அப்பா: "மகனே, உன்னைவிட வயசுல பெரியவங்கள மரியாதை இல்லாம பேசக்கூடாது. அவங்கள பேர் சொல்லி கூப்பிடக்கூடாது புரிஞ்சுதா?"
பையன்: "அம்மா உங்களைவிட வயசானவங்களா?........."
அப்பா:........?..........?..........?
தொப்பி ஜோக் டாப்.
பதிலளிநீக்கு