சனி, ஜூன் 14, 2014

மியாவ்வ்வ்வ்வ்.......


அந்த பூனைக்கு போலீஸ் வேலை.

இந்த சின்ன எலி தன் மூக்கை தரையில் தட்டி தட்டி தரையை மோப்பம் பிடித்தபடி பதுங்கி பதுங்கி வாலை அங்கும் இங்கும் ஆட்டியபடி ஒரு புகார் அளிக்க அந்த போலிஸ் பூனையிடம் வந்தது.. ஈவ் டீஸிங் கேஸ். எலியை கண்ட பூனையின் கண்ணிரண்டும் பிரகாசித்தது. புசு புசுவென அதன் ரோமங்கள் எழும்பி நின்றது. முன் மற்றும் பின் கால்களின் நகங்களை உள்ளே இழுத்து கொண்டு தனது இருக்கையின் நுனிக்கு வந்து அமர்ந்தது. எலி இன்னும் கொஞ்சம் அருகே வந்தது. ரொம்ப கிட்டத்தில் வந்து பூனையை பார்த்தவுடன் அதற்கு பயத்தில் பதற தொடங்கியது. பூனையின் மீசை ரோமங்கள் அதன் மூச்சின் வெகத்துக்கு எற்ப அசைவதை கண்டு மிரண்டது. பூனையின் ஓரப் பார்வையை கண்ட எலி தனது மாராப்பை சரிசெய்து கொண்டது. பூனை லத்திக்கம்பை எடுத்து மேஜையின் மீது மெதுவாக தாளம் தட்ட தொடங்கியது. எலி உடம்பெல்லாம் உதறல் எடுக்க திரும்பி போய் விடலாமா என ஒரு கணம் யோசித்தது. பூனையின் அனல் பார்வையை கண்டு திரும்பி போகவும் பயமாக இருந்தது. அக்குளில் வைத்திருந்த புகார் மனுவை எடுத்து பூனையிடம் பவ்யமாக நீட்டியது.  

பூனை : ம்..........என்னாடி இது..........?  
எலி   : ஒரு பராதிங்க.....எஜமான்.
பூனை முன்னங்கால தூக்கி ஒரெ மிதி.
ஐயொ........ 
(மிதி)
வலிக்குது
(மிதி)
தாங்க முடியல
(மிதி)
எதுக்கு என்ன அடிக்கிறீங்க...
(மிதி, மிதி)
நான் போயிடுறேன் எஜமான்
(மிதி)
வலிக்குது எஜமான்
(மிதி)
நான் புகார் கொடுக்க வந்தவ எஜமான்.......
(மிதி, மிதி)
நான்.......
(மிதி)
எனக்கு ஒண்ணும் வேணாம் நான் போயிடுறென்
(மிதி)
அம்மா......
(மிதி)
கொல்றானே.....
(மிதி)
...........
(மிதி)
............

என்ன சத்தத்தையே காணோம்...செத்துட்டாளா.......சே....இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடலாம்னு பார்த்தேன்.......

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பதிவு எழுதும் போது செய்த விளையாட்டுத்தனம் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும். நான் சொல்ல வந்த கருத்தை எனக்கு உணர்த்திய அந்த திரைப்படப் பாடல் வரிகளை உங்களுக்கும் நினைவு படுத்துகிறேன். "எ(லி)ளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல் தான் மாறாதா…..?"

      நீக்கு
  2. சில இடங்களில் இன்னும் இந்த விளையாட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது