திங்கள், ஜூன் 16, 2014

மாயக்கண்ணன்



தெரிந்த நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்ல, முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவனது மகன் மண்ணை அள்ளி தின்றுக் கொண்டிருந்ததைப்  பார்த்தேன். ஓடிச் சென்று அவன் கையைப் பிடித்து "உன் பெயர் என்னடா?" எனக் கேட்க, மழலைச் சிரிப்புடன் "கண்ணன்" என்று சொன்னான். "மண்ணையா தின்கிறாய், உன் வாயைத்  திறந்து காட்டு" என்ற போது  மீண்டும் அதே மழலைச் சிரிப்புடன் வாயைத் திறந்தான். மாயக் கண்ணனின் வாய்க்குள் ஈரேழு பதினான்கு உலகங்களும் சுற்றி சுழல்வதை கண்டு ரசிக்கும் சக்தியில்லாத பாவப் பிறவியாகிப் போனேனே நான் என மனம்வருந்தி வந்த வழி திரும்பி நடந்தேன்.

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது