எந்த தியேட்டரா இருந்தா என்ன? என்ன படமா இருந்தா என்ன? இடைவேளை சமயத்துல நாம எல்லாரும் வாங்கி சாப்பிடுற ஒரு முக்கியமான நொறுக்கு தீனி பாப்கார்ன்தான். இது உங்க நேரத்த போக்கறதுக்கு மட்டுமான சிற்றுணவு (SNACKS-சரியா ..?) மட்டுமல்ல. உங்களது ஆரோக்கியத்திற்கு மிக அத்தியாவசியமான அநேக ஊட்டச்சத்துகள் இதில் அடங்கியுள்ளது.
கொழுப்பு குறைந்த, அதிக நார் சத்துக்கள் அடங்கிய பாப்கார்ன் ஒரு உன்னதமான பொருள் என்பது முன்னமே அறிந்த ஒரு உண்மையாகும். ஆனால் அறிவியலாளர்கள் பாப்கார்னின் கூடுதலான பலன்களையும் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ளவற்றை காட்டிலும் அதிக சத்துக்கள் பாப்கார்னில் இருக்கின்றதாம்.
புற்றுநோய், இதயநோய், மறதிநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்க பாப்கார்ன் பெரிதும் உதவுகின்றது. இதில் அடங்கியுள்ள ஆன்ட்டி ஆக்ஸைடன்ட் (Antioxidant) என்ற உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது. மேலும் உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகளை உடலுக்குள் வராமல் தடுக்கும் போளிபெனோல்ஸ் (Polyphenols) நிறைந்தது.
மற்ற தின்பண்டங்கள் போன்று இல்லாமல் முழுவதும் மக்கா சோளம் தானியம் மட்டுமே உபயோகித்து பாப்கார்ன் செய்யப்படுகிறது. ஒருநாளைக்கு ஒரு நபருக்கு தேவையான தானிய சத்தின் 70 சதவிகிதம் கொடுக்க பாப்கார்ன் உதவுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இது மிகச்சிறந்த ஒரு தானிய உணவு.
பாப்கார்னில் இயல்பாக சர்க்கரை இல்லாததால் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை பரிந்துரைக்கப்பட்டாலும், இப்போது விற்கும் பாப்கார்ன் தேங்காய் எண்ணெய், கேராமல், சாக்லேட்டு போன்றவற்றைச் சேர்த்துச் செய்வதால் அவை பெரும் தீங்கு விளைவிக்கக் கூடும்.
பாப்கார்னில் இவ்வளவு உபயோகம் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. நல்ல தகவல்கள். முன்பெல்லாம் சினிமாத் தியேட்டரிலும் பீச்சிலும் மட்டுமே அதிகம் கிடைக்கும் இவை, இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் இடம்பெற்று, கல்யாணங்களில் கூட இதற்கென்று தனி இடம் தந்திருப்பது பார்க்க முடிகிறது!
பதிலளிநீக்குஅளவிற்கு மீறினால் எதுவும் ஆபத்து தான்...
பதிலளிநீக்கு