ஞாயிறு, மார்ச் 30, 2014

பக்தி பரவசமாக ஒரு பாடல் ..


இந்த வலைப்பூ தொடங்கியதிலிருந்தே இசை எனும் தலைப்பில் இந்த பாடலை பதிவு போடவேண்டும்னு நெனச்சுகிட்டே இருந்தேன். இது எனக்கு பிடிச்ச பாடல் மட்டுமல்ல. நான் முதல் முதலா கேட்டவுடன் பிடிச்சதுமான பாடல். நான் பிறந்தது முதல் 5 வயது வரை பாலக்காட்டு பாட்டி வீட்டில்தான் இருந்தேன். அதன் பிறகு சென்னைக்கு  கூட்டி வந்து விட்டார்கள். ஊரில் இருந்த போதே இந்த பாடலை கேட்டிருக்கேன். சென்னைக்கு வந்த பிறகு முதன் முதலா தியேட்டருக்கு சென்று பார்த்த திரைப்படத்தில் இதே பாடலை அதுவும் இரண்டு மூன்று வருடம் கழித்து மீண்டும் கேட்டதால் மனசில் அப்படியே பதிந்து விட்டது என நினைக்கிறேன். மனதை வருடும் மெல்லிய இசை பாடல் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் ஏதுமின்றி சீராக செல்வதை கவனியுங்கள். இங்கே பதிவில் போட்டிருப்பது மலையாள பாடல். படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்திருப்பதால் நீங்கள் இதே பாடலை நிச்சயமா தமிழிலும் கேட்டு இருப்பீங்க. வீடியோவில் அந்த சின்னப்பெண் தன்னிரு கைகளைகூப்பி தலைக்குமேல் உயர்த்தி கும்பிட்டபடியே "ஐயப்ப சுவாமி, ஐயப்ப சுவாமி" என பாடும்போது பக்தி பரவசமாக உணர்வீர்கள்.

பாடலை பாடியவர் - அம்பிளி, இசை - தேவராஜன் (மலையாள சினிமாவின் மெல்லிசை மன்னர்), பாடலை இயற்றியவர் - வயலார் ராம வர்மா. படம் - சுவாமி ஐயப்பன்.






 

1 கருத்து:

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது