எனக்கு வாஸ்து சாஸ்திரம் என்ற வஸ்துவில் துளியும் நம்பிக்கை கிடையாது. ஆனால் இது மாடிப்படி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலும் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு உதவும் என்பதாலும் இந்த பதிவு.
இப்போது கட்டும் வீடுகள் பெரும்பாலும் அடுக்குமாடிகள் என்பதால் மாடிப்படிகள் முக்கியத்துவம் பெறுகிறது. மாடிப்படிகள் பல்வேறு வடிவங்களிலும், சிமெண்ட், இரும்பு அல்லது மரத்திலான படிகளாகவும் கட்டப்படுகிறது. இருந்தபோதிலும் நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் மாடிப்படியின் அமைப்பு வாஸ்து சாஸ்திர அமைப்புடன் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.
மாடிப்படிகள் ஒரு வீட்டின் வாஸ்து தோஷத்தை நிர்ணயம் செய்கின்றது என எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா..?
சீன வாஸ்து சாஸ்திரம் பெங் சுயி நிபுணர்களின் கருத்துப்படி மாடிப்படிகள் வீட்டின் வாஸ்து தோஷத்தை கொடுப்பதில் / நீக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றது.
மாடிப்படிகள் எப்போதும் வீட்டின் மேற்கு திசையிலும் தெற்கு திசையிலும் மட்டுமே அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு திசையில் மாடிப்படிகள் அமைப்பது தோஷமாக மாறி உங்களுக்கு பண நஷ்டங்கள் ஏற்படுத்தி விடலாம்.
மாடிப்படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படை எண்ணாக இருப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் "0" என முடியும் எண்ணிக்கையில் அதாவது10, 20, 30 என இருக்கக்கூடாது
சுழல் மாடிப்படிகள் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கலாம் என்பதால் தவிர்க்கவும்
உடைந்த படிக்கட்டுகளை உடனடியாக செப்பனிட்டு சரி செய்ய வேண்டும்.
மாடிபடிக்கு கீழே குளியலறையோ, சமையலறையோ அல்லது பூஜை அறையோ அமைக்க கூடாது.
வீட்டின் நடுவே மாடிப்படி வைப்பது சரியானதல்ல என்றாலும் அதனால் தோஷம் எதுவும் இல்லை. ஆனால் அவ்வாறு வைக்கும் மாடிப்படியில் சரியான வளைவுகள் இல்லையென்றால் விபரீதமான பலன்களை கொடுக்கும். மாடிபடிகளுக்கு மேற்புறம் மின்விளக்கு அமைப்பதும் கூடாது.
எனது தளத்தில் உங்களின் கருத்துரை மூலம் உங்கள் தளம் அறிந்தேன்... பலவற்றை அறிய உங்கள் தளத்தை தொடர்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...