அ = எழுத்துக்கெல்லாம் முதன்மை என்ற சிறப்பை விட "அம்மா" என்ற சொல்லுக்கு முதலில் இருப்பதுதானே இதன் பெருமை
ஆ = அடிபடும் போதும் சரி ஆச்சரியப்படும் போதும் சரி என்னை மறக்காதே
இ = உனக்கு முதன் முதலில் கோலம் போட சொல்லி கொடுத்தது நான்தானே
ஈ = "பல்லை இளித்தல்" என்பதை "பல்லை ஈளித்தல்" என்று மாற்றி சொன்னால் தவறில்லை என்று நினைக்கிறேன்
உ = கரும்பலகையின் உச்சியில் " உ" என்று எழுதியபின் அகரம் தான் முதலெழுத்து என்று வாத்தியார் பாடத்தை தொடங்கினார்.
ஊ = பிறந்த குழந்தை சுவாசம் தொடங்க முகத்தில் "ஊ" என ஊதி உயிர்கொடுத்து வாழ்ந்து முடிக்கையில் சங்கெடுத்து "ஊ" என ஊதி வழியனுப்புகிறோம்
எ = என்னுடையது என்பது எங்களுடையது என மாற்றும் நாள் வந்தால் நல்லது
ஏ = "ஏன்" என பிறரிடம் கேட்பது அதிகாரம், ஆணவம் அல்லது அறியாமை. அதையே நீ உன்னிடம் கேட்பது ஞானம், அடக்கம், ஆன்மீகம்,
ஐ = ஐவருக்கு மனைவியான திரௌபதி கர்ணனை பற்றி விசாரிக்க பஞ்ச பாண்டவர்கள் அதிர்ந்தனர்.
ஒ = தலைக்கவிழ்ந்தால் மதிப்புக் குறைந்திடுமே என தலையை உயர்த்தி பிடித்தபடி நிமிர்ந்து நின்றது "ஒன்பது"
ஓ = தேர்தலில் ஓட்டைப் பிரிக்க புதிதாய் முளைத்த கட்சியின் தலைவருக்கு இதற்கு முன் (வீட்டுக் கூரை) ஓட்டை பிரிப்பதுதான் தொழிலாம்.
ஔ = இது ஓரெழுத்து "இரட்டைக் கிளவி" பிரிச்சா போச்சு.
ஃ = மூன்று கண்ணுடைய தெய்வத்தை கைகூப்பி வணங்குபவன் மூன்று கண்ணுடைய என்னை வெட்டிக் கொல்கிறானே என தேங்காய் புகார் சொல்லியது

ஃ க்கு ஒண்ணும் அம்புடலையா தலைவரே?
பதிலளிநீக்குஃ க்கும்.
நீக்குhahaha.. Sriram Sir lock pannittaaru..
நீக்குஃ - க்கை மறந்து விட்டதற்கு மன்னிக்கவும். சரிசெய்தது போதுமா……..?
நீக்குவித்தியாசமான சிந்தனைகள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குmudhal murai varugiren..!! Tea, Coffee ethuvum illaiyaa Maadhu? ;)
பதிலளிநீக்குவாங்கஜி வாங்கஜி........டீ, காபி கூடவே டிப்பனுக்கு தோசை ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீராம் சார் கிட்ட ஆர்டர் பண்ணியிருக்கிற ரவா தோசையும் இருக்குஜி
நீக்கு