அது இரண்டெழுத்துகள் மட்டும் கொண்ட ஒரு வார்த்தை. இருப்பினும் ஆறு எழுத்துக்கள் கொண்டு எழுதுகிறார்கள். சிலமுறை நான்கு எழுத்திலும் எப்பொழுதாவது ஏழு எழுத்துகளுடனும் எழுதப்படும். ஆனால் மூன்றேழுத்தில்தான் நாமெல்லோரும் எழுதுகிறோம்.
புதன், ஜூன் 25, 2014
செவ்வாய், ஜூன் 24, 2014
எலி, ஒலி, வலி, கிலி
சின்ன வயசில
அருணுக்கு போலீஸ்னா ரொம்ப பயம். பள்ளிக்கூடம் போற வழியில் இருந்த காவல் நிலைய
வாசலில் கத்தி சொருகி வச்சிருக்கும் ஒரு துப்பாக்கியுடன் பாரா நிற்கும் போலிஸ்க்காரரை பார்த்ததும் மெதுவாக நடக்கும் அவனது கால்கள் தானாக வேகம் எடுக்கும். ஆனா இப்ப பெரியவனா வளர்ந்த பிறகு பயம்
குறைந்துவிட்டது. சொல்லப்போனா இப்பல்லாம் கடுமையான வெயிலிலும் மழையிலும் கடமையே
கண்ணும் கருத்துமாக அவர்கள் பணி செய்வதை பார்க்கும்போது சிலசமயம் அவுங்க மேல ஒரு பரிதாபம் கூட
தோன்றுவதுண்டு என்று சொன்னால் மிகையாகாது.
பயமறியாத
இளங்கன்றாக சுத்திவந்த அவனோட எரியாவில ஒரு நாள் கொஞ்சம் வசதியோடும் செல்வாக்கோடும் இருந்த ரியல் எஸ்டேட்
சொர்ணாக்கா வீட்டிற்குள் ஒரு நிறைஞ்ச அமாவாசை ராத்திரியன்று சொர்ணாக்கவோட சொத்துகஜானாவின்
பாதுகாப்பு அம்சங்களின் உறுதியினை சோதனை செய்யும் உயர்ந்த நோக்கத்துடன் புகுந்த
ஒரு திருடன் கொஞ்சம் காசு, பணம், துட்டு, MONEYகளை களவாடிக்கொண்டு ஓடிப்போனான்.
EMI ஆக வரும் மாமூல் அளவும் சொர்ணாக்காவின் செல்வாக்கும் அதிகம் என்பதால் ஏரியா எஸ்.ஐ இந்த கேஸ நேரடியா விசாரணைப் பண்ணத்
தொடங்கினார்.
ஆள் யாருமே
இல்லாமல் விசாரணைப் பண்ணுவது சிரமம் என்பதால், தூக்கம் வராததால் இரவில் தெருவில்
சுற்றித் திரிந்தவர்களும் முந்தைய திருட்டு சம்பவங்களில் பிடிபட்டு வெளியே
வந்திருக்கும் சில நல்லவர்களும் நலம் விசாரித்து விருந்துபசாரம் அளிப்பதற்காக பூரண மரியாதைகளுடன் எரியா காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இந்த சமயத்தில்
அருண் வீட்டில் பெயின்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. வேலை செய்துகொண்டிருந்தவர்களில் இரண்டு பேர் போலிஸ் தயாரித்த நல்லவர்களின் பட்டியலில் தங்களது பெயரும் உள்ளதென அறிந்தவுடன், அவசரமா
ஊருக்கு போக வேண்டியுள்ளது எனக்கூறி அன்றைய தினக்கூலியை வாங்கிக் கொண்டு எஸ்கேப்
ஆயினர். அன்றைய பொன்மாலைப் பொழுதிலேயெ இவங்களை கேட்டு அருண்
வீட்டுக்கு போலிஸ் வந்தது. இதை எற்கனவே எதிர்பார்த்த மாதிரி பெயிண்டிங் மேஸ்திரி அதிகமா பேசி உளறி
மாட்டிக்க விரும்பாமல் “சாப்பாட்டுக்கு போனானுங்க சார். இன்னும் வரலன்னு” சொல்லி
அனுப்பினார். யார் வந்து கேட்டாலும் இதையே சொல்லுங்கன்னு அருண் வீட்டில்
உள்ளவர்களிடமும் சொல்லி வச்சிருந்தார்.
அடுத்த நாள் பெயின்டிங் வேலைக்கு யாரும் வரவில்லை. பயமறியாத
இளங்கன்றான அருண் காலேஜுக்கு கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில் எஸ்.ஐ. நாலஞ்சு
போலிஸ்காரர்களுடன் மீண்டும் வந்தார். பொறுமையாக முகத்தில் பதட்டம் எதையும்
காட்டிக்கொள்ளாமல் அருண் வீட்டின் கேட் அருகில் சென்றான். தலைமறைவாகிவிட்ட
(தலையோடு கூடிய கை, கால் உடம்பு எல்லாம் மறைவாகிவிட்ட) பெயிண்ட்டிங் சங்கத்தை பற்றிதான் அவுங்க கேட்ட சரமாரி கேள்விகள்.
ஜீப்பில் இருந்தபடியே, கான்ஸ்டபிள், "தம்பி நேத்து எத்தனை பேர் வேலைக்கு
வந்தாங்க, முந்தா நாள் எத்தனைப் பேர் வந்தாங்க, அதுக்கு முந்தின நாள் எத்தனை.......? என கேள்வி மேல கேள்வியா கேட்டார். இத்தனை கெள்விகளை வரிசையா எதிர்ப்பார்க்காத காரணத்தாலும், பஸ் + சைட்டு
எல்லாம் மிஸ்ஸாயுடுமோ என்ற அவசரத்திலும், அவனது நேரம் சரியில்லாததாலும் அருண்
கொஞ்சம் தெனாவட்டா, “இதெல்லாம் எப்படி ஞாபகம் வச்சுக்கறது. எனக்கு எதுவும்
தெரியாது” என்றான். அவனது வாய் மொழியும் உடல் மொழியும் போலீஸ் பார்வைக்கு வேற
மாதிரி பட்டுவிட்டது.
கங்காவாக இருந்தவ சில நொடிகளில் சந்திரமுகியாக மாறுவதைப் போல் கான்ஸ்டபிள் முகம் சட்டென கொஞ்சம் கொடூரமாக மாறியது. ஜீப்பிலிருந்து ஒரே ஏத்தாக தாவி இறங்கி டால்பி டிஜிட்டல் சப்தத்தில்
அவனிடம் கேட்டார், “உனக்கு எத்தனை வயசாகுதுடா....?” கான்ஸ்டபிளோட அந்த ரியாக்ஷனை பார்த்தவுடன் அதுவரைக்கும் “எப்பிடி இருந்த நான்" விவேக் கெட்டப்பில் நிமிர்ந்து நின்றிருந்த அருண் லைட்டா ஜகா வாங்கி “இப்பிடி ஆயிட்டேன்" விவேக் கெட்டப்புக்கு மாறி நின்றான்.
அவன் மனசுக்குள் சில பல பட்டாம்பூச்சிகள் ஒண்ணா சேர்ந்து பறந்தது. ஹார்ட் பீட்
கன்னா பின்னான்னு தடுமாறி துடிப்பதை அனுபவித்தபடியே, ஸ்கூல் பையன் பேசற மாதிரி
குரலை தாழ்த்தி சொன்னான், “19 வயசு சார்”,
“91 வயசா ஆகிப்போச்சு....? என்று கேட்பதற்குத்தான் அந்தக் கேள்வி என்பது உடனே அவனுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த
முறை சப்தம் இன்னும் கொஞ்சம் முறுகலாக வந்தது. அருண் மிரண்டு விட்டான். அவனுக்கு
மனசில படபடப்பு வந்துட்டா அப்புறம் அவன் செய்யும் செயல்கள் கோணல் மாணல் தான்.
எப்படியோ கொஞ்சம் தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு, "என்னங்க சார் நீங்க என்னமோ நான்தான் திருடின மாதிரி
விசாரிக்கிரீங்க", என்றான்,
ஓ!!!!! நீ திருட்டு கூட செய்வியா.....? திருட்டு நடந்தத விசாரிக்கத்தானே
வந்திருக்கோம். ரொம்ப தெனாவட்டா பேசுற. கொஞ்சம் மரியாதையா கேட்கிற விவரங்களை நீயாக சொன்னால் உனக்கு
நல்லது, இல்லன்னா நாங்க கேட்கிற விதத்தில கேட்க வேண்டியிருக்கும்”
அருண் டென்ஷன்
ஆனான். பின் எதோ ஞாபகம் வந்த மாதிரி “சார் பெயின்டிங் வேலைக்காரர்களுக்கு கூலி
குடுக்கிறதை ஒரு நோட்டில கணக்கு எழுதி வச்சிருக்கோம். அதை பார்த்தால் உங்களுக்கு விவரம்
எல்லாம் தெரியும்” என்று கூறியதும் இல்லாமல் நோட்டு புக்கையும் கொண்டு வந்து
கொடுததான். கணக்கு
புத்தகத்தை பார்த்து விவரம் பார்த்துக் கொண்ட கான்ஸ்டபிள் அவனை மெலும் கீழும்
கோபத்துடன் முறைத்துப் பார்த்தார். அப்பொதுதான் அவனுக்கு உறைத்தது. இவ்வளவு நெரம்
மெஸ்திரி சொன்னமாதிரி 2 வெலைக்காரர்களும் சாப்பிட போய் திரும்பி வரவே இல்லைன்னு
திரும்ப திரும்ப சொல்லிட்டே இருந்தோம். ஆனா நோட்டு புத்தகத்தில் அந்த 2 பெரும்
கூலி வாங்கினதா எழுதி இருக்கு.
கான்ஸ்டபிள்
அவனிடம் திரும்பவும் டால்பி டிஜிடலோடு கொஞ்சம் டர்போவும் சேர்த்துக்கொண்டு “ நெத்து அவனுங்க
எப்ப போனான்னு சொன்னெ...?” என்று கேட்டதும் அருண் தலையை குனிந்து அவசரப்பட்டு
கணக்கு புக்கை எடுத்துக் கொடுக்க ஐடியா கொடுத்த தன் சுயபுத்தியை நொந்து கொண்டான். போச்சு,
இன்னிக்கி வசமா மாட்டிக்கிட்டோம், இன்னும் கொஞ்ச நெரத்தில தெருவு ஜனங்க முன்னாடி
இந்த கான்ஸ்டபிள் நம்மள அடிச்சு வெளுத்து வாங்கப் போறாரு என்று நினைத்தான், கூடவே
அடிவாங்கும் போது ஐயோ, அம்மா, அப்பா என்று விதவிதமா கத்தி கதறுவதற்கும் மனசுக்குள்ளேயே ஒத்திகை
பார்த்துக் கொண்டான்.
ஆனா
கான்ஸ்டபிள் அடிக்கவில்லை, மாறாக அவனை ஒரு குரூரப் பார்வை பார்த்துவிட்டு திரும்பி ஜீப்பில் இருந்த எஸ்.ஐ
யிடம் “சார், பையன் பிஞ்சிலேயே பழுத்தவன் போல தெரியுது, இங்க வச்சு விசாரிச்சா
வேலைக்கு ஆவாது, நம்ம ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயி நாலு தட்டு தட்டினா
எல்லாத்தையும் தானா கக்கிடுவான்” என்றார்,
அதைக் கேட்டவுடன் அருண் இடி விழுந்தது
போல் அதிர்ந்தான். அவனோட பேஸ்மென்ட் (அதாங்க.......அவனது கால்கள்) பூகம்பம் வந்த மாதிரி தட தடன்னு ஆட
ஆரம்பித்தது. மயக்கம் போட்டு விழுந்திடுவது போல் உணர்ந்தான். இவுங்க இங்கயே இந்த மிரட்டு
மிரட்டுறாங்களே...ஸ்டேஷனுக்கு போனா என்னா கதியாவோம்னு நினைத்தான்.
சுதாரிப்பதற்காக கண்ணை ஒருதரம் இறுக்க
மூடினான். மெதுவாக திறந்தபோது சந்து முனையில் அவனுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு
தலையின் பின்பாகம் விறு விறுவென போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தான். அதைப்
பார்த்ததும் அவனது மயக்கம் மொத்தமும் சுத்தமா தெளிந்து எல்லா நினைவு நரம்புகளிலும்
புதுரத்தம் பாய்ந்து சென்றது. அவன் கான்ஸ்டபிள பார்த்து உரக்கக் கூவினான்,
சா.......ர்...அதோ போறான் பாருங்க சார், அவந்தான் சார் பெயின்டிங் மேஸ்திரி,
அவன்தான் சார் மெயின் இன்பர்மேஷன் சென்டர்,....!!! அவன்தான் சார் மெயின் ப்ராசஸிங் யூனிட்......!!! அவன்தான் சார் மெயின் செர்வர்......!!!....
நடந்தது என்னன்னா, கூலி கணக்கு பார்க்க வீட்டுக்கு வந்த பெயின்டிங் மேஸ்திரி போலீஸ் வண்டிய பார்த்ததும் அவசர அவசரமா எஸ்கேப் ஆக முயற்சிக்கும்போது துரதிஷ்டவசமா, இல்லை இல்லைஅருணோட அதிஷ்டவசமா, இல்லை இல்லை அதிஷ்டவசமா தொப்பை இன்னும் வளராததால் கான்ஸ்டபிள் துரத்திப்போய் பிடிச்சதும் ஈசியா மாட்டிக்கிட்டான்.
நடந்தது என்னன்னா, கூலி கணக்கு பார்க்க வீட்டுக்கு வந்த பெயின்டிங் மேஸ்திரி போலீஸ் வண்டிய பார்த்ததும் அவசர அவசரமா எஸ்கேப் ஆக முயற்சிக்கும்போது துரதிஷ்டவசமா, இல்லை இல்லைஅருணோட அதிஷ்டவசமா, இல்லை இல்லை அதிஷ்டவசமா தொப்பை இன்னும் வளராததால் கான்ஸ்டபிள் துரத்திப்போய் பிடிச்சதும் ஈசியா மாட்டிக்கிட்டான்.
புதுசா வீட்டுக்கு அடிச்ச பெயின்ட்
வாசனை கொஞ்ச நாளுக்குத்தான் அருணுக்கு தொல்லை கொடுத்தது. ஆனா ராத்திரியும் பகலும்
வீட்டை சுத்தி அந்த கான்ஸ்டபிளோட டால்பி டிஜிட்டல் சத்தம் மட்டும் ரொம்ப
காலத்துக்கு அவனுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த மாதிரி நேரத்தில் அவன் தனக்குத்தானே
சொல்லிக் கொள்வான், “என்னை சும்மா பயமுறுத்தத்தான் கான்ஸ்டபிள் அப்பிடியெல்லாம்
சவுண்டு குடுத்தாரு. இல்லைன்னா நோட்டு புத்தகத்தில எழுதிவச்ச கணக்கு ஞாபகம்
வச்சுக்காததுக்கு யாராச்சும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி போயி அடிப்பாங்களா
என்ன.....?” ஐயோ. தமாசு தமாசு.
ஆனா பூனைக்கு எல்லாம் தமாசும்
விளையாட்டும்தான். எலிக்குதானே தெரியும் வலியும் அவஸ்தையும் எல்லாம்.
திங்கள், ஜூன் 16, 2014
மாயக்கண்ணன்
தெரிந்த நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்ல, முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த அவனது மகன் மண்ணை அள்ளி தின்றுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஓடிச் சென்று அவன் கையைப் பிடித்து "உன் பெயர் என்னடா?" எனக் கேட்க, மழலைச் சிரிப்புடன் "கண்ணன்" என்று சொன்னான். "மண்ணையா தின்கிறாய், உன் வாயைத் திறந்து காட்டு" என்ற போது மீண்டும் அதே மழலைச் சிரிப்புடன் வாயைத் திறந்தான். மாயக் கண்ணனின் வாய்க்குள் ஈரேழு பதினான்கு உலகங்களும் சுற்றி சுழல்வதை கண்டு ரசிக்கும் சக்தியில்லாத பாவப் பிறவியாகிப் போனேனே நான் என மனம்வருந்தி வந்த வழி திரும்பி நடந்தேன்.
சனி, ஜூன் 14, 2014
மியாவ்வ்வ்வ்வ்.......
அந்த பூனைக்கு போலீஸ் வேலை.
இந்த சின்ன எலி தன் மூக்கை தரையில் தட்டி தட்டி தரையை மோப்பம் பிடித்தபடி
பதுங்கி பதுங்கி வாலை அங்கும் இங்கும் ஆட்டியபடி ஒரு புகார் அளிக்க அந்த போலிஸ்
பூனையிடம் வந்தது.. ஈவ் டீஸிங் கேஸ். எலியை கண்ட பூனையின் கண்ணிரண்டும் பிரகாசித்தது.
புசு புசுவென அதன் ரோமங்கள் எழும்பி நின்றது. முன் மற்றும் பின் கால்களின் நகங்களை உள்ளே இழுத்து கொண்டு தனது இருக்கையின் நுனிக்கு வந்து அமர்ந்தது. எலி இன்னும் கொஞ்சம்
அருகே வந்தது. ரொம்ப கிட்டத்தில் வந்து பூனையை பார்த்தவுடன் அதற்கு பயத்தில் பதற
தொடங்கியது. பூனையின் மீசை ரோமங்கள் அதன் மூச்சின் வெகத்துக்கு எற்ப அசைவதை கண்டு
மிரண்டது. பூனையின் ஓரப் பார்வையை கண்ட எலி தனது மாராப்பை சரிசெய்து கொண்டது. பூனை
லத்திக்கம்பை எடுத்து மேஜையின் மீது மெதுவாக தாளம் தட்ட தொடங்கியது. எலி
உடம்பெல்லாம் உதறல் எடுக்க திரும்பி போய் விடலாமா என ஒரு கணம் யோசித்தது. பூனையின்
அனல் பார்வையை கண்டு திரும்பி போகவும் பயமாக இருந்தது. அக்குளில் வைத்திருந்த
புகார் மனுவை எடுத்து பூனையிடம் பவ்யமாக நீட்டியது.
பூனை : ம்..........என்னாடி இது..........?
எலி : ஒரு பராதிங்க.....எஜமான்.
பூனை முன்னங்கால தூக்கி ஒரெ மிதி.
ஐயொ........
(மிதி)
வலிக்குது
(மிதி)
தாங்க முடியல
(மிதி)
எதுக்கு என்ன அடிக்கிறீங்க...
(மிதி, மிதி)
நான் போயிடுறேன் எஜமான்
(மிதி)
வலிக்குது எஜமான்
(மிதி)
நான் புகார் கொடுக்க வந்தவ எஜமான்.......
(மிதி, மிதி)
நான்.......
(மிதி)
எனக்கு ஒண்ணும் வேணாம் நான் போயிடுறென்
(மிதி)
அம்மா......
(மிதி)
கொல்றானே.....
(மிதி)
...........
(மிதி)
............
என்ன சத்தத்தையே காணோம்...செத்துட்டாளா.......சே....இன்னும் கொஞ்சம் நேரம்
விளையாடலாம்னு பார்த்தேன்.......
வெள்ளி, மே 23, 2014
கோச்சடையான் படம் வந்தாச்சே.......
செவ்வாய், மே 20, 2014
கைகள் இல்லை. கால்கள் இல்லை. கவலைகள் இல்லை.
நிக்கோலஸ் ஜேம்சு வோய்ச்சிச் (Nicholas James Vujicic) அல்லது சுருக்கமா நிக் வோய்ச்சிச். ஒரு உணர்ச்சிகரமான பேச்சாளர்.
பிறவியிலேயே டெட்ரா-அமெலியா சின்ட்ரோம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டதால் இரண்டு கால்களும் இல்லாமல், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார். ஆரம்பத்தில், இவருடைய ஊனத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக இவர் மனநலம் குன்றியவர்களோடு இணைந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது.
இவர் தன்னுடைய எட்டாவது வயதில் மனஉளைச்சல் காரணமாக அடிக்கடி தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டார். தன்னுடைய பத்தாவது வயதில், தன்னுடைய பெற்றோர்களின் அன்பு காரணமாக, அதனை கைவிட்டார். அவருடைய தாயார், செய்தித்தாளில் வெளியான அவரைப் போன்ற மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையைப் பற்றி சுட்டிக்காட்டியது அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது. அதன்பின் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பணிகளையும் தானாகவே, வேறொருவரின் உதவியின்றி செய்ய ஆரம்பித்தார். தன்னை எழுதுவதற்கு தயார் செய்தார். பிறகு கணினியில் வேலை செய்வது, டென்னிஸ் பந்துகளை தூக்கி எறிய, ட்ரம்ஸ் இசைக் கருவியை வாசிக்க, தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் குடிக்க, தலை வாரிக்கொள்ள, பல் துலக்க, நீச்சல் அடிக்க, முகச்சவரம் செய்துகொள்ள மற்றும் தொலைபேசியைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார்.
தன்னுடைய குறைகளைத் தாண்டி, தன்னுடைய பதினேழாவது வயதில் "லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்" என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை துவங்கினார். 2005-ம் ஆண்டு, அந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை நிக் வென்றார். நிறைய தொண்டு நிறுவனங்களும் அவருடைய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காக உதவும் இவருடைய நிறுவனத்திற்கும் உதவ முன்வந்தன. 2012-ம் ஆண்டு, கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தன்னுடைய 21-ம் அகவையில் கணக்கியல் மற்றும் நிதியியல் திட்டமிடலை இரட்டை பட்டமாக முடித்தபின் மிகப்பிரபலமான பேச்சாளராக உருவானார். சுமார் 5 கண்டங்களில் உள்ள 24 - நாடுகளில் மூன்று மில்லியனுக்கும் அதிமான பள்ளிக் கல்லூரி மாணவர்கள், நிறுவன ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களிடம் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயர்ச்சியின் முக்கியத்துவம் பற்றிய உரையாற்றியுள்ளார். இவர் தன்னுடைய சேவைகளைத் தொலைக்காட்சிகளிலும், புத்தகம் மூலமாகவும் மக்களுக்கு விளக்கி வருகிறார். இவருடைய முதல் புத்தகமான, லைப் வித் அவுட் லிமிட்ஸ் (Life Without Limits: Inspiration for a Ridiculously Good Life) 2010-ம் ஆண்டு வெளியானது. பின்னர் 2005-ஆண்டு தன்னுடைய தினசரி வாழ்க்கையில் தான் செய்யும் செயல்களை லைப் இஸ் க்ரேட்டர் பர்பஸ் (Life's Greater Purpose), என்னும் குறும்படத்தின் மூலமாக வெளியிட்டார். இதுவே இவருடைய முதல் தொழில்முறையான பேச்சாகும். இளைஞர்களுக்காக, நோ ஆர்ம்ஸ், நோ லெக்ஸ், நோ வொர்ரீஸ் (No Arms, No Legs, No Worries: Youth Version) என்ற தொகுப்பினையும் வெளியிட்டார்.
கீழே நான் இணைத்துள்ள வீடியோவில் கை கால்கள் இல்லாமலே இவர் செய்யம் ஆச்சரியமூட்டும் சாகசங்களை பாருங்கள். இணைய வேகம் கருதி இந்த சிறிய அளவிலான வீடியோவினை இணைத்தேன். youtube ல் இன்னும் நிறைய வீடியோக்கள் உள்ளன. எல்லாம் மிகவும் அருமை.
பிறவியிலேயே டெட்ரா-அமெலியா சின்ட்ரோம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டதால் இரண்டு கால்களும் இல்லாமல், இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தார். ஆரம்பத்தில், இவருடைய ஊனத்தின் காரணமாக கல்வி நிறுவனங்களின் அனுமதி மறுக்கப்பட்டது, பிறகு சட்டத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக இவர் மனநலம் குன்றியவர்களோடு இணைந்து படிக்கும் சூழல் ஏற்பட்டது.
இவர் தன்னுடைய எட்டாவது வயதில் மனஉளைச்சல் காரணமாக அடிக்கடி தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டார். தன்னுடைய பத்தாவது வயதில், தன்னுடைய பெற்றோர்களின் அன்பு காரணமாக, அதனை கைவிட்டார். அவருடைய தாயார், செய்தித்தாளில் வெளியான அவரைப் போன்ற மாற்றுத்திறனாளியின் வாழ்க்கையைப் பற்றி சுட்டிக்காட்டியது அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது. அதன்பின் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பணிகளையும் தானாகவே, வேறொருவரின் உதவியின்றி செய்ய ஆரம்பித்தார். தன்னை எழுதுவதற்கு தயார் செய்தார். பிறகு கணினியில் வேலை செய்வது, டென்னிஸ் பந்துகளை தூக்கி எறிய, ட்ரம்ஸ் இசைக் கருவியை வாசிக்க, தம்ளரில் தண்ணீர் ஊற்றிக் குடிக்க, தலை வாரிக்கொள்ள, பல் துலக்க, நீச்சல் அடிக்க, முகச்சவரம் செய்துகொள்ள மற்றும் தொலைபேசியைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார்.
தன்னுடைய குறைகளைத் தாண்டி, தன்னுடைய பதினேழாவது வயதில் "லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்" என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை துவங்கினார். 2005-ம் ஆண்டு, அந்த ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபருக்கான விருதை நிக் வென்றார். நிறைய தொண்டு நிறுவனங்களும் அவருடைய தேவைகளுக்காகவும், மற்றவர்களுக்காக உதவும் இவருடைய நிறுவனத்திற்கும் உதவ முன்வந்தன. 2012-ம் ஆண்டு, கானே மியாகரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கீழே நான் இணைத்துள்ள வீடியோவில் கை கால்கள் இல்லாமலே இவர் செய்யம் ஆச்சரியமூட்டும் சாகசங்களை பாருங்கள். இணைய வேகம் கருதி இந்த சிறிய அளவிலான வீடியோவினை இணைத்தேன். youtube ல் இன்னும் நிறைய வீடியோக்கள் உள்ளன. எல்லாம் மிகவும் அருமை.
திங்கள், மே 12, 2014
மனைவிக்கு மரியாதை
நம் வாழ்க்கையில் பதின்ம வயது பருவம் ரொம்ப சங்கடமான ஒன்று. அலைபாயும் மனதை கட்டுபடுத்தி சரியான முடிவுகள் ரொம்ப கடினம். அது போன்றதுதுதான் நாற்பதின்ம வயதும். நாற்பது வயசு நாய் வயசு என்று எங்கோ படித்த ஞாபகம். குடும்பத்தலைவரின் பொறுப்புகளும் கடமைகளும் அதிகரித்து சதா மனசு பன்முக சிந்தனையுடன் முடிவெடுக்க திணறும் காலம். மேலும் இயற்கையாக இந்த பருவத்தில் ரொம்ப தொந்தரவா வீட்டம்மா அடிக்கடி கேட்கத் தொடங்கும் கோடாரிக் கேள்விகள். ஆனா உங்களுக்கிடையே நிலவும் அன்பும் அன்யோன்யமும்தான் இந்த கேள்விக்கணைகளில் பிரதிபலிக்கும். ஆபீஸ் வேலை, அது இதுன்னு ஏதோ யோசனையில் இருந்தபடி அதற்கு பதில் சொன்னா மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். பத்திரிக்கையில் நாம் படிக்கும் கணவன் மனைவி ஜோக்ஸ் நம்ம வீட்டில் உண்மையான மாதிரி ஆயிடும். இதுக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதான்னா............"கண்டிப்பா கிடையாது". வேணும்னா நாம பள்ளி / கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது தேர்வு நெருங்கும் சமயங்களில் தேர்ந்தெடுத்த முக்கியமான கேள்விகளுக்கான பதில்களை மட்டும் மீண்டும் ஒருமுறை திரும்ப படித்து வைத்துக் கொள்வதுபோல் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் தெரிந்து வைத்து கொள்ளலாம்.
இனி உங்களது வாழ்க்கை துணைவியிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் முக்கியமான இந்த 5 அதிரடி கேள்விகளை மட்டும் அலசுவோம். இந்த கேள்விகளுக்கு நீங்கள் சமயோசிதமாக பதில் சொல்லாவிடில் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதோ அந்த 5 வில்லங்கமான கேள்விகள்
1. இப்ப எதைப்பற்றி யோசனை பண்ணுறீங்க?
2. நீங்க என்னை உண்மையா நேசிக்கிறீங்களா?
3. நான் ரொம்ப குண்டா ஆகிவிட்டேனா?
4. அவள் என்னவிட அழகா இருக்காளா?
5. நான் செத்து போயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?
எச்சரிக்கை. மேலே நீங்கள் படித்த கேள்விகள் அனைத்தும் இரண்டு பக்கமும் கூர்த்தீட்டபட்ட கத்திகள். தவறான அல்லது கவனக்குறைவான உங்களது
பதில்களால் ரத்தகாயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதால் நன்றாக
யோசித்து பதில் சொல்லவும். நாம வாழ்வது சிலகாலம். அதை நல்லபடியாக தமது துணைவியருடன் வாழ்ந்து விட்டு போயிடலாம்னு ஆசை உள்ள எல்லாவரும் இந்த கேள்விக்கான பதில்களை சுயபரிசோதனை செய்து தெரிந்து வைத்துக்கொள்ளவும்.
1. இப்ப எதைப்பற்றி யோசனை பண்ணுறீங்க?
இதற்கான உசிதமான பதில்: "ஒண்ணுமில்ல செல்லம், இவ்வளவு இலட்சுமிகரமான, ஐஸ்வர்யமான, மங்களகரமான நீ எனக்கு மனைவியா அமைஞ்சது எவ்வளவு அதிர்ஷ்டம்னு நெனைச்சிட்டிருந்தேன்'. ரொம்ப எளிமையாகவும் அதே சமயம் நச்சுன்னு சொன்ன மாதிரியுமான பதிலிது. அடுத்த வீட்டில் இருக்கும் லட்சுமியையோ, ஐஸ்வர்யாவையோ, மங்களத்தையோ நீங்கள் நினைத்துகொண்டிருக்கும் போது இந்த கேள்வி வந்தாலும் கூட பதில் சொல்வது எளிது. உலகெங்கும் உள்ள கணவர்கள்
மிக அதிகமாக சொல்லி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற பதில் இது.
2. நீங்க என்னை உண்மையா நேசிக்கிறீங்களா?
"இல்லையா பின்ன?", என்று சொல்லலாம். கூடவே மானே, தேனே, பொன்மானே, கண்ணே, உயிரே, இதயமே, என்றெல்ல்லாம் சேர்த்து போட்டு சொன்னா இன்னும் நல்ல பலன் கொடுக்கும். "தங்கமே" என்று சொல்றது நல்லதுதான் ஆனா இப்பல்லாம் நகைக்கடைப் பக்கம் நாம் திரும்பி பார்ப்பதே இல்லை என்பதால் அதை கவனத்துடன் உபயோகிக்கவும். எக்காரணம் கொண்டும் கீழ்கண்ட பதில்கள் வாய்தவறியும் சொல்லாமல் இருக்க தீவிர பயிற்சி எடுத்து கொள்ளவும்.
"அப்பிடித்தான்னு நெனைக்கிறேன்"
"ஆமான்னு சொன்னா உனக்கு சந்தோஷமா?"
"ஏன் கேட்கிற?"
"நானா?"
"ஆமான்னு சொன்னா உனக்கு சந்தோஷமா?"
"ஏன் கேட்கிற?"
"நானா?"
3. நான் ரொம்ப குண்டா ஆகிவிட்டேனா?
"இந்த கேள்விக்கு அதிகபட்ச தைரியத்துடன் பதற்றப்படாமல் "இல்லை' என்று சொல்லவும். சொல்லி முடித்த உடனே ஒரிரு முறை நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டு விட்டால் உங்கள்
ரத்த அழுத்தம் சாதாரண நிலைக்கு வந்துவிடும்.
தவிர்க்க வேண்டிய பதில்கள்.
"ரொம்ப குண்டும் இல்லை. ரொம்ப ஒல்லியாவும் இல்லை."
"யார்கூட கம்பேர் பண்ணுறப்போ?"
"உன் வயசுக்கு கொஞ்சம் அதிகம்தான்"
"உன்னவிட குண்டா நெறையபேர் இருக்காங்க. கவலைப்படாத."
4. அவள் என்னவிட அழகா இருக்காளா?
இது அவளிடம் நீங்கள் உளறிகொட்டிய உங்களது பழைய காதலியை பற்றியதாகவோ, சமீபத்தில் நீங்கள் பார்த்த திரைப்படத்தின் கதாநாயகியை பற்றியதாகவோ அல்லது அவளுடன் நீங்கள் வெளியே செல்லும்போது வழியில் வைத்து பார்த்து ஜொள்ளுவிட்ட ஒரு ஜிகிடியை பற்றியதாகவோ இருக்கலாம்.
இதற்கு ஒரு பாதுக்காப்பான பதில் "இல்லவே இல்லை. நீதான் அவளைவிட அழகு"
தவறுதலான பதில்கள்
"அவ அழகா இருந்தா என்ன? அசிங்கமா இருந்தா என்ன?"
"அவ சின்ன வயசு, அதோட கொஞ்சம் வெள்ளையா, ஸ்லிம்மா இருக்கா"
"ஆனா அழகு மனசில தானே இருக்கு"
5. நான் செத்து போயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?
சரியான பதில், "என் கண்ணே, நீ என்ன விட்டு போயிட்டா நான் ஒரு நிமிஷம் கூட உயிரோட இருக்க மாட்டேன். அடுத்த லோக்கல் ரயில் வண்டி வரதுக்கு முன்னால தண்டவாளத்துல என் தலையை வச்சிடுவேன்".
முன்னெச்சரிக்கை இல்லாத பதிலால் கீழே சொல்லிய ஒரு பழைய கதையின்படி
நடக்கவும் வாய்ப்பு உண்டு
"என்னங்க, நான் செத்து போயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க?"
"என்ன கேள்வி இது? நான் ரொம்ப கவலைப்படுவேன்"
"நீங்க வேற கல்யாணம் செஞ்சுப்பீங்களா?"
"என்ன பேசற? அதெல்லாம் செய்ய மாட்டேன்"
"ஏன் கல்யாண வாழ்க்கை சலிச்சு போச்சா?"
"அப்படியெல்லாம் இல்லை" (கொஞ்சம் யோசிச்சபடி)ஒருவேளை செய்ய வேண்டியிருக்கலாம்"
"செய்வீங்களா....?"
"ஆமா"
"செஞ்சுட்டு அவகூட இந்த வீட்டிலேயே தங்குவீங்களா?"
"தங்காம, வேற எங்க போறது?"
"நானும் நீங்களும் சேர்ந்து இருக்கிற போட்டோவ கழட்டி வச்சிட்டு அவளும் நீங்களும்
சேர்ந்து இருக்கிற போட்டோவ மாட்டி வைப்பீங்களா?"
"ஆமா அதுதானே சரி"
"என்னோட தங்க நகைகள், துணிமணிகள் எல்லாத்தையும் அவள் எடுத்துக்குவாளா?"
"துணிமணிகள் எடுக்கமாட்டான்னு நெனைக்கிறேன். அவ சுடிதார் எல்லாம் போடறதில்லை"
வாய்பேச முடியாத ஊமைகளிடமும், காது கேட்காத செவிடர்கள் மீதும் நாம் பொறாமை கொள்ளும் தருணங்கள் இவை.
கடைசியா ஒரு பஞ்ச்
தான் செய்தது சரியில்லை என்றால் தப்புன்னு ஒத்துக்கொள்பவனே சத்தியசீலன்.
தான் செய்தது சரியா தப்பான்னு அறுதியிட்டு உறுதிபடுத்திக் கொள்பவனே ஞானி.
தான் செய்தது சரியாக இருந்தாலும் தப்புன்னு ஒத்துக்கொள்பவனே நல்ல கணவன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


