புதன், டிசம்பர் 11, 2013

11.12.13 @ 14.15.16 hrs

2012ம் ஆண்டு தொடங்கி முடியும் வரை மாயன் நாள்காட்டியை பற்றியும் உலக அழிவு  பற்றியும் பல பதிவுகள் படிக்க வாய்ப்பு கிடைத்தது.உள்ளூர் நாள்காட்டிகளையே பாக்க அப்ப நேரம் இருந்தது இல்லை, ஆனால் மாயன் நாள்காட்டி என்ன  சொல்லுதுன்னு பார்க்க, கேட்க, படிக்க ரொம்ப ஆர்வம் இருந்தது உண்மைதான். 


இப்போது முகநூல் மற்றும் மின்னஞ்சல்களில் சமீப காலங்களில் தேதிகள் குறித்த பதிவுகள் வந்து கொண்டிருக்கிறது.  அதாவது இந்த மாதம் (டிசம்பர் 2013) ஐந்து ஞாயிற்றுகிழமை, ஐந்து திங்கள்கிழமை மற்றும் ஐந்து செவ்வாய்கிழமை வருவதாகவும் இதுபோல் இனி 834 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த மாதிரி வரும் என்றும் பல பதிவுகள். கீழே உள்ள படம் சொல்வது என்னவென்றால் இதுதான் இந்த நூற்றாண்டின் கடைசி FANCY நம்பரா வரும் தேதியாம். நல்ல காமெடி இல்ல.இதேபோல் போன வருடம் 12.12.12 தேதி, அதன் முந்தைய வருடம் 11.11.11 தேதி, சீனர்களின் அதிர்ஷ்ட நாளாக 2008ம் ஆண்டு வந்த 08.08.08 தேதி என பல தகவல்கள்.  


அனால்  இது வெறும் தேதி, கிழமை மற்றும் எண்களால் வரும் மாயை மட்டுமே. இந்த வருட நாள்காட்டியில் உள்ள தேதி மற்றும் கிழமைகள் எல்லாம் ஆறு ஆண்டுக்கு பிறகு அதாவது 2019 ஆண்டு நாள்காட்டியில் உள்ள தேதி மற்றும் கிழமைகள் ஏறக்குறைய ஒன்றாக இருக்கும். இதே போல் அடுத்த வரும் வருடங்களிலும் 2-2-22, 22-2-22, 3-3-33, 4-4-44, 5-5-55 என ஏகப்பட்ட தேதிகள் வருமில்லையா? இந்த விஷயத்தை ஒரு வித்தியாசமான தேதியில் பதிவு செய்யலாம் என முடிவு செய்து இன்றைய தேதியை தேர்தெடுத்தேன். இன்றைய தேதியில் அப்படி என்ன விஷேசம் என்று  கேட்கிறீர்களா?.............

எல்லா நாள்காட்டியையும் நல்லா பாத்துட்டேன். இந்த தேதியும் சரி, வேற எந்த தேதியாக இருந்தாலும் சரி ஒரு தடவை விட்டு விட்டால் அந்த  தேதி 834 வருஷத்துக்கு பிறகு மட்டுமல்ல. என்னைக்குமே திரும்ப வராதுங்க........... 


இப்ப தலைப்ப இன்னொரு தரம் படிங்க  11.12.13 @ 14.15.16 hrs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது