வெள்ளி, செப்டம்பர் 05, 2014

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

இந்த 100 நாட்களில் பிரதமர் மோடியின் ஆட்சியில் எனக்கு பிடித்தது என்ன என்று ஒரு கேள்வி.

விசுAwesomeமின்துணிக்கைகள் வலைப்பதிவில் இந்த கேள்வியை கேட்டு என்னை தொடர் பதிவெழுத அழைத்தவுடன் ரொம்ப நேரம் யோசனை செய்யாமல் எழுதிய பதில்கள் இவை. அரசியல் பற்றி பேச எழுத எதுக்குங்க யோசனையெல்லாம் பண்ணி நேரத்த வேஸ்ட் பண்ணனும். சரி இப்ப பதில்களைப் படிங்க

1. திட்டக் கமிஷனைக் கலைத்தது. (ஆளே இல்லாத கடையில இன்னும் யாருக்குப்பா டீ ஆட்டிகினு இருக்கே)

2. தமிழக கட்சிகளைப் போலல்லாமல் முந்தைய அரசின் நல்ல திட்டங்களை முடக்காமல் தொடர்ந்து நடத்துவது

3. காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு கட்சியின் தவறுகளை உணர்ந்து தங்களை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு அளித்தது (திருத்தி கொண்டார்களான்னு கேட்கக்கூடாது).

4. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் விதத்தில் மக்களவை அடிதடிக் கலவரங்கள் ஒத்திவைப்புகள் எதுவும் இல்லாம இந்த 100 நாளும் நடத்தி முடித்தது. இதற்கு முக்கிய காரணம் முந்தய காங்கிரஸ் கட்சியில் இருந்த மந்திரிகள் ஆளாளுக்கு ஒரு கோஷ்டியா தனி தனி அரசாங்கமா செயல் பட்டாங்க. மோடியின் மந்திரிசபை இன்னும் (இந்த 100 நாளில்) அந்த நிலையை அடையவில்லை

5. எல்லாத்துக்கும் மேல தலைநகர் டெல்லியில் ஒரு அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு மறந்துவிடாமல் இருக்கச் செய்வது

//// இந்த கேள்விக்கு நான் மட்டும் பதில் அளிக்காமல் எனக்கு தெரிந்த மற்றும் ஒரு ஐந்து பதிவர்களிடமும் வைக்கின்றேன். இந்த பதிவர்களும் , இதற்க்கு பதில் கூறிவிட்டு, அவர்களுக்கு அறிமுகமான 5 பதிவர்களுக்கு இந்த கேள்வியை கேட்டு வைக்குமாறு தயவு கூறி கேட்டு கொள்கிறேன். ////

ஒரு கேள்விக்கு எதுக்கு 5 பதில்ன்னு கேக்குறீங்களா.....? அது ஒண்ணுமில்லீங்க. எனக்கு அறிமுகமான பதிவர்களை அரசியல் கேள்வி கேட்டு தொல்லை தர விருப்பமில்லாததால் 5 பதில்களையும் நானே அளித்துள்ளேன்.

இதெல்லாம் நாளைக்கு வரலாறுல வரும். பசங்க பாடத்துல படிப்பாங்க. நமக்கு சிலை வைப்பாங்க. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

 

6 கருத்துகள்:

 1. நன்றி மாடிப்படி மாது. அரசாங்கத்தின் மேல் நல்லதோர் மதிப்பை வைத்துள்ளீர். 5 பதிலுக்கும் நன்றி. நான் 5 பேரிடம் பதில் கேட்க்க சொன்னதே, மற்ற நண்பர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளத்தான். இது அவர்களை தொந்தரவு செய்யும் என்று நினைக்க வில்லை. தங்கள் பதிலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வலைதளத்தில் பலோவர்களாக சேரமுடியவில்லை இதை நான் உங்களுக்கு கூகுல் ப்ளஸ் மூலம் தெரிவித்தேன் இன்னும் அதே பிரச்சனைகள் உள்ளன. முடிந்தால் அந்த கெட்ஜெட்டை ரீ இன்ஸ்டால் செய்யவும்

  பதிலளிநீக்கு
 3. உங்களின் இந்த பதிவு அருமை வித்தியாசமாக இருந்தது

  பதிலளிநீக்கு
 4. நான் உங்கள் வலைபக்கம் வரும் போதெல்லாம் பாலோவராக சேர முயற்சிப்பேன். ஆனால் ERROR வண்டு சேர முடியாமல் போய்விடும் ஆனால் இன்று சரக்கு அடித்து விட்டு உங்கள் சரக்கு பற்றிய பதிவை படித்து விட்டு சேர முயற்சித்தேன் என்ன ஆச்சிரியம் எந்த வித பிரச்சனை இல்லாமல் இன்று சேர்ந்து விட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///இன்று சரக்கு அடித்து விட்டு உங்கள் சரக்கு பற்றிய பதிவை படித்து விட்டு சேர முயற்சித்தேன் என்ன ஆச்சிரியம் எந்த வித பிரச்சனை இல்லாமல் இன்று சேர்ந்து விட்டேன்////"

   ஹா..ஹா... என்ன சரக்கு. மீண்டும் இந்தியன் பீரா...? அல்லது அமெரிக்கன் பீரா...?"

   நீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது