திங்கள், செப்டம்பர் 29, 2014

படித்தபடி... ரசித்தபடி...சிரித்தபடி....3


அலுவலகத்தில் இரண்டு பெண்களின் உரையாடல்

ஒருத்தி: நேத்து சாயந்திரம் ரொம்ப ஜாலியா இருந்தது. உனக்கு எப்படி?

மற்றவள் : அதையேன் கேக்கறே...? செம்ம கடுப்பு. என் புருஷன் வேலையில் இருந்து திரும்பி வந்ததும் சாப்பிட்டு உடனே படுத்து தூங்கி விட்டார். நீ உன் கதைய சொல்லு.

ஒருத்தி : ரொம்ப சந்தோசமா இருந்தது. அவர் ஆபீசில் இருந்து வந்ததும் டின்னருக்கு என்னை வெளியே கூட்டிபோனார். அது முடிஞ்சதும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே நடந்தோம். வீட்டுக்கு வந்ததும் பெட்ரூமில் மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து ரொம்ப நேரம் பேசினோம். எல்லாம் கனவு மாதிரி இருந்தது.

அதே சமயம் வேறு அலுவலகத்தில் இவர்களது கணவர்களின் உரையாடல்

ஒருவன்: நேத்து சாயந்திரம் என்னப்பா விசேஷம்.?

மற்றவன் : சூப்பர்பா. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனதும் டைனிங் டேபிள்ள சாப்பாடு ரெடியா இருந்தது. சட்டுபுட்டுனு சாப்பிட்டுட்டு நல்லா தூங்கிட்டேன். உனக்கு எப்படி?

ஒருவன் : ரொம்ப பேஜாரா போச்சுப்பா. வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனா வீட்ல கரண்ட் இல்லை. கரண்ட் பில் கட்டாததால் EB காரன் பீஸ புடுங்கிட்டு போயிட்டான். சரின்னு பொண்டாட்டிய கூட்டிகிட்டு ஹோட்டலுக்கு போயி சாப்பிட்டேன். கையில இருந்த காசெல்லாம் ஹோட்டல் பில்லுக்கே சரியா போச்சு. திரும்பி வரும்போது ஆட்டோக்கு குடுக்ககூட காசில்ல. நடந்தே வர வேண்டியதாச்சு. வீட்டுல கரண்ட் இல்லாததால தூக்கமே வரல. இருந்த ஒன்னு ரெண்டு மெழுகுவர்த்திய கொளுத்தி வச்சுக்கிட்டு தூக்கம் வரவரைக்கும் பேசிகிட்டு இருந்தோம்.

 

9 கருத்துகள்:

 1. அருமையான நகைசுவை பதிவு, மாது. இன்று நான் படித்ததில் மிகவும் பிடித்தது. தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 2. எதையும் பார்க்கும் பார்வையில் இருக்கிறது விஷயம் என்பதை மிக எளிமையாக சொல்லிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. ஹஹஹா இன்னொரு பக்கம் .நல்ல நகைச்சுவை நம்ம மதுரைத் தமிழன் காத்து உங்களுக்கும் அடிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன்.

  "ஒருவள்" என்று எழுதுவது சரியல்ல. ஒருத்தி என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவனுக்கு எதிர்ச்சொல் ஒருவள் அல்ல

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் சொன்னபடி மாற்றிவிட்டேன். பிழையை திருத்தியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. " எல்லாம் பார்வை மாயை " என்ற வாழ்க்கை தத்துவத்தை எவ்வளவு எளிதாக விளக்கிவிட்டீர்கள் !!! அருமை

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

  http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 6. மனைவியின் ஆங்கிள், கணவனின் ஆங்கிள் அதுவும் நல்ல நகைச்சுவையுடன்....அருமையா எழுதறீங்கப்பா!

  பதிலளிநீக்கு
 7. அருமை. வாழ்த்துகள். பதிவுக்கு நன்றிகள்.

  -=-=-=-=-

  மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வெகுநாட்கள் முன்பு வந்திருந்த இதை நானும் ஒரு சிறுகதையாக்கிக் கொடுத்திருந்தேன்.

  தலைப்பு: நேத்து ராத்திரி ............ யம்மா

  இணைப்பு: http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_03.html

  இது JUST தங்கள் தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது