சனி, நவம்பர் 22, 2014

பாட்டு கேட்டு பாராட்டு


அனைத்து விதமான ரசிகர்களும் விரும்பும் சிறந்த திரைப்பட காதல் பாடல்கள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த காதல் பாடல்கள் நம் மனதுக்கு பிடிக்க முக்கிய காரணம் அதன் டியூன் எப்போதும்
மென்மையாகவும் மெலடி மெட்டுக்களாகவும் அமைந்திருக்கும். இசைக் கருவிகள் அடக்கமாக இசைப்பதும், பாடகரும் பாடகியும் மெல்லிய
சுருதியில் பாடுவதும், ஹம்மிங் மற்றும் கோரஸ் போடும் ஜிகினா
குரல்கள் அமைதியாகவும் ஒலிக்கும் இந்த வகையான பாடல்கள் நம் மனதுக்கு உடனே பிடித்து போகின்றது. அனைவரும் விரும்பும் காதல் பாடல்களுக்கே உரிய ஒரு தனி ஃபார்முலா இது.

ஆனா இங்க பாருங்க இந்த காவியக் காதல் பாடல் ஆரம்பம் முதல் முடியும் வரை ஒரே ஆரவாரம். இசைக் கருவிகளின் ஆனந்தத் தாண்டவம். மென்மையான இசையென்றால் உடனே நம் ஞாபகத்துக்கு வரும் புல்லாங்குழல் கூட இங்கே உச்ச ஸ்தாயியில் பின்னி பெடலெடுக்கின்றது. பாடகர்களைப் பற்றியோ சொல்லவே  வேண்டாம். குறிப்பாக TMS. "டட டாடா...டடடட டாடா...." என நீட்டிப் பாடுவதைக் கேட்கும்போது அவருக்கு இரண்டு மூன்று தொண்டைகள் இருந்திருக்குமோ...? என்று தோன்றுகிறது.

இளமைத் துள்ளலுடன் காதல் ரசம் சொட்டும் பாடல் வரிகளும் அசத்தல். குறிப்பாக "அச்சம் இதோடு அடங்கட்டுமென்று அணைத்தேன் மெதுவாக" என்ற வரிகளை கேட்டு அந்தக் கால இளசுகள் அடக்கமுடியாமல் தள்ளாடி தவித்திருப்பர்கள் என்பது நிச்சயம். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இல்லையா....?3 கருத்துகள்:

 1. உண்மை... பழைய பல பாடல்கள் என்றும் சலிக்காதவை...

  பதிலளிநீக்கு
 2. அருமையான பாடல்! கேட்க இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! "அச்சம் இதோடு அடங்கட்டுமென்று அணைத்தேன் மெதுவாக// ஏன் இப்போது மட்டும் என்னவாம் இது தள்ளாட வைக்காது என்று நினைக்கின்றீர்களா... இருக்கலாம்...இப்போதுள்ள இளசுகளுக்குப் பயம் இல்லை எங்கின்றீர்களோ...சரிதான்...அதுவும்

  பதிலளிநீக்கு
 3. மிகவும் பிடித்த tms பாடல்களில் ஒன்று.
  சிவாஜி ஓவர் act பண்ணி கெடுத்த பாடல்களில் ஒ.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது