சனி, நவம்பர் 15, 2014

காது காது லேது லேது

எனக்கு என் மனைவியின் மீது ரொம்ப பாசம். அவளுக்கு உடம்புக்கு சுகமில்லைன்னா எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கும். இதுவரை கடவுள் புண்ணியத்தில் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் வாழ்க்கை போய்க்கொண்டு  இருந்தது. ஆனால் இப்ப கொஞ்ச நாளா சின்ன சின்ன குழப்பங்கள். நான் ஒண்ணு  கேட்டால் அவள் ஒன்று சொல்கிறாள். அவள் கேள்விக்கு நான் பதில் சொன்னால் ரொம்பத்தான் கோபித்து கொள்கிறாள். குழம்பிப் போனாலும் நான் பொறுமையாய் இருந்து கடைசியில் அதற்கான காரணம் கண்டுபிடித்தேன். அவளுக்கு காதில் எதோ குழப்பம். கேட்கும் சக்தி குறைந்து விட்டது என தெரிந்தது. அனால் அவளிடம் சொன்னால் வருத்தப் படுவாள். என்ன செய்வது என யோசித்து நான் மட்டும் எனக்கு தெரிந்த ஒரு டாக்டரிடம் சென்று ஆலோசனை கேட்டேன்.

அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஒரு யோசனை சொன்னார். கேட்கும் சக்திக் குறைபாட்டின் அளவுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கலாம்.  மனைவிக்கு எவ்வளவு தூர இடைவெளியில் காது கேட்க முடிகிறது
என்பதை அறிந்து கொள்ள ஒரு டெஸ்ட் செய்ய எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

இன்றே அதை செய்ய முடிவு செய்து வீட்டுக்கு திரும்பி வந்தேன். அவள் சமயலறையில் இருந்தாள். நான் வீட்டுக்கு பின்புறம் தோட்டத்திற்கு சென்று அங்கிருந்து குரல் கொடுத்தேன், "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (தோராயமா ஒரு 30 அடி தொலைவு)

எதிர்பார்த்த மாதிரியே எந்த ரியாக்ஷனும் இல்லை. நான் அங்கிருந்து திரும்ப வீட்டு  பின்கதவுக்கு அருகில் வந்து நின்று மீண்டும் குரல் கொடுத்தேன்.
"என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா  ஒரு 20 அடி தொலைவு)

இப்பவும் எதுவும் பதில் வரவில்லை. நான் வீட்டுக்குள் வந்து பெட்ரூமில் இருந்து மீண்டும் குரல் கொடுத்தேன். "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா ஒரு 15 அடி தொலைவு).

எதுவும் பதில் வராததால் எனக்கு மிகுந்த கவலையாயிற்று. ஹாலுக்கு வந்து இருந்து மீண்டும் குரல் கொடுத்தேன். "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா ஒரு 10 அடி தொலைவு).

பதிலில்லை. நான் மனமொடிந்து போனேன். சமையலறைக் கதவருகில் சென்று பார்த்தேன்.அவள் திரும்பி நின்றபடி சமையல் செய்து கொண்டு
இருந்தாள். கதவுக்கு அருகில் நின்றபடி மீண்டும் குரல் கொடுத்தேன். "என்னப்பா இன்னிக்கு என்ன சமையல்" (சுமாரா ஒரு 5 அடி தொலைவு).

பட்டென்று திரும்பிப் பார்த்தவள் என்னை முறைத்து பார்த்தாள். நான் டெஸ்ட் ரிசல்ட் வந்ததில் மகிழ்வதா இல்லை கவலைப்படுவதா என குழம்பி நிற்கையில், அவள் சத்தமான குரலில், " இதோட 5 தடவ சொல்லிட்டேன், "மீன் கொழம்பு", மீன் கொழம்பு" உங்களுக்கு காது கேக்குதா இல்லையா ......?

 

10 கருத்துகள்:

 1. ஏன் காட்டுப் பன்னி மாதிரி கத்துறீங்க ?மெதுவா கேட்கக்கூடாதா என்று மனைவி எரிந்து விழுந்ததாகவும் கேள்விபட்டேனே :)

  பதிலளிநீக்கு
 2. ஏன் காட்டுப் பன்னி மாதிரி கத்துறீங்க ?மெதுவா கேட்கக்கூடாதா என்று மனைவி எரிந்து விழுந்ததாகவும் கேள்விபட்டேனே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா... என் காதில் கேட்கவில்லையே....நல்லவேளை நான் 6 அடி தூரத்தில் இருந்திருப்பேன்

   நீக்கு
 3. ஹஹஹஹஹஹஹஹஹஹ்ஹ செம பல்பு!!!! ???? எதிர்பார்த்த பதில்!!!! ஏன்னு கேக்கக் கூடாது...

  பதிலளிநீக்கு
 4. மிகவும் ரசித்தோம்!!!!! என்ன "தோம்" அப்படினு யோசிக்கிறீங்களா? நாங்க ரெண்டு பேர் எங்க தளத்துல எழுதறோம்....துளசிதரன், கீதா. அதனாலதான் "தோம்" கீதா பெண்ணாக இருந்தாலும் இதையெல்லாம் மிகவும் ரசிப்பவள்தான்.

  தொடர்கின்றோம்!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது