வெள்ளி, ஏப்ரல் 03, 2015

அன்புத் தொல்லை.....

"யார் நீங்க.? என்ன வேணும் உங்களுக்கு..?"

"இப்படி குறுக்கே நிக்காதீங்க. கொஞ்சம் வழி விடுங்க.."

"கன்னா பின்னான்னு பெனாத்திக்கிட்டு ஏன் என் பின்னாடியே வரீங்க..? என்னை கொஞ்சம் போக விடுறீங்களா..?"  

"நான்தான் நீங்க யாருன்னு தெரியாதுன்னு சொல்லிட்டேன்ல. திரும்பவும் ஏன் என்ன தொல்லை பண்றீங்க..?"

"இப்படி வழிமறிச்சு நிக்காதீங்க. என்ன போக விடுங்க. தள்ளி நில்லுங்க. இனிமே உங்க சகவாசமே வேண்டாம்".

"இது  பெரிய தொல்லையா போச்சே. உங்ககிட்டதானே சொல்றேன். எனக்கு நீங்க யாருன்னே தெரியாது. உங்களை எனக்கு இப்ப சுத்தமா பிடிக்கலை. தள்ளி நில்லுங்க நான் போறேன்".

"உங்களோட பழகின நாட்களை எல்லாம் நான் வெறுக்கிறேன். திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கிட்டு  என் பின்னாடி வராதீங்க". 

"இப்படியெல்லாம் பேசி என்னை  தர்மசங்கடத்தில ஆக்காதீங்க. வேண்டாம் அதெல்லாம் சரியாகாது. இனிமேலும் உங்க தொல்லைய என்னால சகிச்சுக்க முடியாது. நீங்க போயிடுங்க".

"வேண்டவே வேண்டாம்....போயிடுங்கன்னு சொல்றேன்ல"

"நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியுது.. ஆனா....?"

"நீங்க மறுபடியும் கஷ்டப்படுத்த மாட்டீங்கன்னு சொல்றத நான்
நம்பறதா இல்ல. உங்களால அழுது அழுது என் கண்ணீரெல்லாம் வத்தி வறண்டிருச்சு...திரும்பவும் நீங்க கஷ்டப்படுத்தினால் எனக்கு அழக்கூட திராணியில்ல".

"இங்க நிக்காதீங்க.. போயிடுங்க.. நான் உங்க கூட வர முடியாது".

"அதெல்லாம் சரிதான். இருந்தாலும்...."
 
"வேணாம்..நான் வந்தாலும் எல்லாம் பழையமாதிரி நல்லபடியா அமையறது ரொம்ப கஷ்டம்".

"இப்பவும் என்னை நீங்க சரியா புரிஞ்சுக்கல.. எனக்கு மட்டும் கவலை இல்லைன்னு நினைக்கிறீங்களா...?"

"சரி நான் வருகிறேன். என்னை நேசிக்கும் உங்களுக்காக வருகிறேன். எனக்கும் உங்க மேல ரொம்ப பிரியம்".
 
"உங்களை என்றென்றைக்குமாய் பிரிந்து போக நினைத்த என்னை திரும்ப
கூட்டிச் செல்ல நீங்கள் வந்ததில ரொம்ப சந்தோசம்".

"இனிமேல் என்னை கஷ்டப் படுத்தக் கூடாது.."

"இல்லை இனிமேல் சத்தியமா நான் உங்கள விட்டு போகமாட்டேன்".

"தொல்லை பண்ணிக்கொண்டு உங்க கூடவே இருப்பேன்".


 
 

9 கருத்துகள்:

 1. வாங்க மாது .. ரொம்பநாள் ஆச்சே..all is well that ends well. எதோ சொல்ல வரீங்க .... எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரி...

  பதிலளிநீக்கு
 2. வாங்க, வாங்க உங்க அன்புத் தொல்லையை தாங்க, தாங்க.

  பதிலளிநீக்கு
 3. ஒரு பக்க உரையாடலில் ஒரு ஊடல் தீர்வது தெரிகிறது!

  பதிலளிநீக்கு
 4. ஒரு பக்க உரையாடலில் ஒரு ஊடல் தீர்வது தெரிகிறது!

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. சுவாரசியமா போய்க்கிட்டிருந்த உரையாடல்ல கடைசியில ஏதாவது டுவிஸ்ட் இருக்கும்னு எதிர்பார்த்தேன். ட்விஸ்ட் இல்லதாதுதான் டுவிஸ்ட்.டோ. ஆனாலும் அன்புத் தொல்லைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 7. உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது