வெள்ளி, மார்ச் 21, 2014

விடுகதை

இதோ உங்கள்  மூளைக்கு வேலை கொடுக்க சில நவீன விடுகதைகள்
(குறிப்பு - எல்லாம் கம்ப்யூட்டர் சம்பந்தமானவை)

1. தொட்டால் வாடும் பூ தொடாமல் மலரும் பூ.
2. கொக்கிபோட்டு இழுத்தால் கூட கூட வந்திடும்.
3. அத்தையை பார்த்ததும் நோய் சுத்தமாய் தீர்ந்தது.
4. கூன்விழுந்த கிட்டப்பாவை குழியில தள்ளிவிட்டாச்சு.
5. ஒருவர் பெற்ற பிள்ளைகள் எல்லாம் ஜன்னல் படியில்
6. இரும்பில் செய்யாத சாவி, துருபிடிக்காத சாவி
7. காப்பாத்த நான் வேண்டும். அனாலும் என்னை யாருக்கும் பிடிக்காது
8. நூற்றியொரு படிகள் ஏறி போனேன். ஊரெல்லாம் சுத்தி வந்தேன்.
9. எலி வீரனுக்கு முதுகில் தீ.
10. இதனை தொட்டால் மறையும் திரை
11. பட்டனை தட்டினேன். சேதி போய் சேர்ந்தது
12. அந்தகால  பயில்வான், இந்தகால நோஞ்சான்.



விடைகள் கீழே ................












1. ஸ்கிரீன் சேவர்
2. மவுஸ் பாயிண்டர்
3. ஆன்ட்டி வைரஸ்
4. ரிசைக்கிள் பின் FILES
5. விண்டோஸ்
6, பாஸ்வேர்ட்
7. ரிஸ்டார்ட்
8. கீ போர்ட்
9. ஒப்டிக்கல் மவுஸ்
10.குளோஸ் பட்டன்
11.ஈ மெயில்
12.மானிட்டர் (இப்ப FLAT)

4 கருத்துகள்:

  1. விடைகளை வாசகர்கள் சொல்ல விட்டிருக்க வேண்டும் நீங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல யோசனை. ஆனால் எனது முந்தைய புதிர் பதிவிற்கு பதிலேதும் வராததால் இந்த புதிரின் பதிலை நானே போட்டுவிட்டேன்

      நீக்கு
  2. கணினிப் புதிர்கள் சுவாரசியம். வித்தியாசம் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது