புதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 25, 2015

கிரிகெட் புதிர்

கிரிகெட் எப்பவுமே ஒரு கணிக்கவே முடியாத ஒரு விளையாட்டு. எப்ப என்ன நடக்கும் எந்த அணி ஜெயிக்கும் எந்த அணி தோற்கும் என்பதை சொல்லவே முடியாது. நல்லா ஆடுறவன் திடீர்னு அவுட் ஆவறதும்,  டம்மியா ஆடுறவன் கடைசி பந்தில் சிக்சர் அடிச்சு  மேட்ச்ச ஜெயிச்சு குடுக்கறதும், உறுதியா ஜெயிச்சிரும்னு தோன்றும் ஒரு ஒரு அணி கடைசி ஓவர்ல தோத்து போறதும் சர்வ சாதாரணமா நடக்கும். இப்படி இன்னும் பல விதமான கிரிகெட் ஆட்டங்களையும், முடிவுகளையும் நீங்க பாத்திருப்பீங்க.

தற்போது நடைபெறும் உலக கோப்பை கிரிகெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகின்றது. 2011 ஆண்டு நடந்த போட்டியைப் போலவே  இந்த முறையும் வெற்றிபெற்று  கிரிகெட் உலக கோப்பையை 
தக்க வைத்து கொள்ளும் என்றே நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல.
இந்திய கிரிகெட் ரசிகர்கள் அனைவரும் அதைத்தானே விரும்புவர்.



தற்போதைய இந்த கிரிகெட் பரபரப்பில் உங்களுக்கு ஒரு கிரிகெட் புதிர். 
 
இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடக்குற ஒரு கற்பனை 
ஆட்டம். முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  அற்புதமாக  விளையாடி இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய
இந்திய அணி தொடக்கத்தில் சற்று பதறியபடி ஆடி சொற்ப
ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் 
விராட் கொஹ்லியும் சுரேஷ் ரெய்னாவும் தங்களது அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றியின் 
விளிம்புக்கு கொண்டு வந்து விட்டார்கள். 
 
இப்ப ஸ்கோர் போர்ட பாருங்க

இந்தியா 49.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள்.  விராட் கொஹ்லி (நாட் அவுட் - 198 ரன்கள்)  சுரேஷ் ரெய்னா (நாட் அவுட் - 97 ரன்கள்)

இந்திய அணி வெற்றிபெற  இன்னும் இரண்டு பந்தில் மூன்று ரன்கள் மட்டுமே தேவை. வெற்றி எளிதாகிவிட்ட இந்த நேரத்தில் விராட் கொஹ்லிக்கு திடீரென  ஒரு யோசனை தோன்றியது. ரெய்னாவிடம் அதை சொன்னதும் அவன் மகிழ்ச்சியுடன் அதை ஒத்துக் கொண்டான்.
 
அடுத்த பந்தை எதிர்கொள்ள தயாராகிறார் விராத் கொஹ்லி.
5 வது பந்தும் 6 வது பந்தும் வீசி முடித்தபின் ஆட்ட முடிவு இப்படி வருகிறது

இந்தியா 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. 
விராட் கொஹ்லி இரட்டை சதம். சுரேஷ்  ரெய்னாவும் சதம் அடித்தார்.

வெற்றி பெற இரண்டு பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் இது  எப்படி சாத்தியமாயிற்று. விடை தெரிந்தால் சொல்லுங்களேன் 


 

புதன், ஜூன் 25, 2014

என்ன வார்த்தை சொல்வீரா...?

அது இரண்டெழுத்துகள் மட்டும் கொண்ட ஒரு வார்த்தை. இருப்பினும் ஆறு எழுத்துக்கள் கொண்டு எழுதுகிறார்கள். சிலமுறை நான்கு எழுத்திலும் எப்பொழுதாவது ஏழு எழுத்துகளுடனும் எழுதப்படும். ஆனால் மூன்றேழுத்தில்தான் நாமெல்லோரும் எழுதுகிறோம்.

வெள்ளி, மார்ச் 21, 2014

விடுகதை

இதோ உங்கள்  மூளைக்கு வேலை கொடுக்க சில நவீன விடுகதைகள்
(குறிப்பு - எல்லாம் கம்ப்யூட்டர் சம்பந்தமானவை)

1. தொட்டால் வாடும் பூ தொடாமல் மலரும் பூ.
2. கொக்கிபோட்டு இழுத்தால் கூட கூட வந்திடும்.
3. அத்தையை பார்த்ததும் நோய் சுத்தமாய் தீர்ந்தது.
4. கூன்விழுந்த கிட்டப்பாவை குழியில தள்ளிவிட்டாச்சு.
5. ஒருவர் பெற்ற பிள்ளைகள் எல்லாம் ஜன்னல் படியில்
6. இரும்பில் செய்யாத சாவி, துருபிடிக்காத சாவி
7. காப்பாத்த நான் வேண்டும். அனாலும் என்னை யாருக்கும் பிடிக்காது
8. நூற்றியொரு படிகள் ஏறி போனேன். ஊரெல்லாம் சுத்தி வந்தேன்.
9. எலி வீரனுக்கு முதுகில் தீ.
10. இதனை தொட்டால் மறையும் திரை
11. பட்டனை தட்டினேன். சேதி போய் சேர்ந்தது
12. அந்தகால  பயில்வான், இந்தகால நோஞ்சான்.



விடைகள் கீழே ................












1. ஸ்கிரீன் சேவர்
2. மவுஸ் பாயிண்டர்
3. ஆன்ட்டி வைரஸ்
4. ரிசைக்கிள் பின் FILES
5. விண்டோஸ்
6, பாஸ்வேர்ட்
7. ரிஸ்டார்ட்
8. கீ போர்ட்
9. ஒப்டிக்கல் மவுஸ்
10.குளோஸ் பட்டன்
11.ஈ மெயில்
12.மானிட்டர் (இப்ப FLAT)

புதன், மார்ச் 12, 2014

கேள்விக்கென்ன பதில்?

உங்களிடம் ஒரு குழப்பமான கேள்வி கேட்கட்டுமா..................?

ஒரு கிராமத்தில் மூன்று நண்பர்கள் இருந்தனர். உங்கள் குழப்பத்தை குறைத்திட உதவியா அவங்க பெயர் ராமு, சோமு, பாலு என்று வைத்துக்கொள்வோம். இவர்களில் ராமு பிறவியிலேயே பார்வையற்றவன்.சோமுவுக்கு சுத்தமா காது கேட்காது. மூன்றாமவன் பாலு பிறவி ஊமை.
 
மூணு பேரும்  சேர்ந்து வியாபாரம் பண்ணி நல்லா சம்பாதிச்சு ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் குருடன் ராமு சேர்த்து வச்சிருந்த பணத்தையெல்லாம் அவனுக்கு தெரியாம (??) திருடிக்கொண்டு செவிடன் சோமு எஸ்கேப் ஆகுறான்.  
ஏதேச்சையா அந்தப்பக்கம் வந்த பாலு (ஊமை) இதை பார்த்துட்டான். சைகை காட்டி கூப்பிட்டு உதவி கேட்க பக்கத்தில வேற யாருமே இல்லாத காரணத்தால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் எப்படி தன் நண்பன் ராமுவுக்கு பணப்பை திருடு போன விஷயத்தை சொல்லுவான்? இதுதான் அந்த கேள்வி.
 
இதே கதை கொஞ்சம் பெரிய, சிறிய வித்தியாசங்களுடன் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் கேள்வி  மட்டும் பொதுவானது. பிறவியிலேயே வாய்பேச முடியாத ஒருவர் எப்படி ஒரு குருடனிடம் ஒரு விஷயத்தை சொல்லி புரியவைப்பான்?
 
மிகச்சரியான விடைதான் வேண்டும் என்று கேட்கவில்லை. கண்டிப்பாக பல விடைகள் கிடைக்கலாம். ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் வேறு கருவிகளை உபயோகிக்காமல் ஊமையான பாலு தன் நண்பனுக்கு உதவ முடியுமா? என்பதுதான் என் கேள்வி!
 
இந்த கேள்விக்கு என்னவெல்லாம் பதிலாக வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்