சனி, மே 28, 2016

பெரிய மனசு

உயிர்போகும் நிலையில்
உள்ளே ஒருவர் 
படுத்திருக்கிறார்.
இல்லைன்னா 
கையோ காலோ
முறிந்து, தேய்ந்து
இரத்தம் வழிந்துகொண்டு 
இதயத்துடிப்பு மெல்ல 
அடங்கியபடி இருக்கலாம்.

ஒருவேளை சுவாசம் 
இழந்து மூச்சு நின்றுபோகும்
நிலையில் இருக்கலாம்.

யாராய் இருந்தாலும் 
எங்கிருந்து வருபவராய் 
இருந்தாலும் சுமந்து 
கொண்டு கிடைத்த 
இடைவெளிகளில்
புகுந்து செல்லும்போது
அலறியபடி கதறியபடி 
ஓடுகின்ற பெரிய மனம் 
கொண்ட அந்த ஊர்திக்கு  

உள்ளே உயிருக்கு 
போராடிக்கொண்டு இருப்பவன் 
சொந்தமா...பந்தமா..?

3 கருத்துகள்:

  1. வருத்தம் தோய்ந்த வரிகள் மனம் கனத்தது.

    பதிலளிநீக்கு
  2. உயிரைக் காப்பாற்ற அழைத்து செல்லும் அந்த ஊர்திக்கு நாம் ஒதுங்கி வழி விட்டாலே நாம் செய்த பெருநன்மையாகும்

    பதிலளிநீக்கு
  3. உயிரைக் காப்பாற்ற அழைத்து செல்லும் அந்த ஊர்திக்கு நாம் ஒதுங்கி வழி விட்டாலே நாம் செய்த பெருநன்மையாகும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது