திங்கள், மார்ச் 24, 2014

படித்தபடி...... ரசித்தபடி..... சிரித்தபடி..... 2

ஆண் : "ஹலோ"

பெண் : "செல்லம், நான்தான். இன்னும் GYM - லதான்  இருக்கீங்களா?

ஆண் : "ஆமா, என்ன விஷயம்"

பெண் : "ஷாப்பிங் பண்ணிட்டு வர்ற வழியில சும்மா பாக்கலாமேன்னு Benz கார் ஷோரூமுக்குள்ள போனேன். SL550 - 2014 மாடல் கார். பாத்து கண்ணு பூத்துபோச்சு. ஏன்னா அழகு. வச்ச கண்ண எடுக்க முடியல. ஒண்ணு புக் பண்ணிடவா....?

ஆண் : "எவ்வளவு ஆகும்....?"

பெண் : மாசம் 2,20,000/- EMI, ஜஸ்ட் 5 வருஷத்துக்கு. நம்ம ஜாயிண்ட் அக்கவுண்ட்ல லோன் கூட ஓகே ஆயிடுச்சு.

ஆண் : "உன் இஷ்டம். முழுப்பணமும் லோனாவே குடுபாங்களான்னு கேட்டுக்கோ?"

பெண் : "செல்லம்னா....செல்லம்தான். உம்ம்ம்மா.........ஐ லவ் யூ டா.........எங்க நீ சம்மதிக்க மாட்டியோன்னு நெனச்சேன். இன்னிக்கிதான் என் வாழ்கையில ரொம்ப சந்தோஷமான நாள். தாங்க்ஸ்டா. லோன் டாக்குமெண்டேஷன முடிச்சிட்டு அப்பறமா பேசுறேன். பை டியர்......"

ஆண் : "பை, ஐ லவ் யூ டூ "

ஆண் போனை வைத்தான். GYM ல இருந்த அனைவரும் அவரை அதிசயமாகவும் கொஞ்சம் பொறாமையுடனும் பார்த்தனர். கையிலிருந்த மொபைல் போனை உயர்த்தி பிடித்தபடி அவன் கேட்டான். "யாருதுப்பா இந்த மொபைல்.....?"


.


 



ஞாயிறு, மார்ச் 23, 2014

பாப்கார்னின் குணநலன்கள்

எந்த தியேட்டரா இருந்தா என்ன? என்ன படமா இருந்தா என்ன? இடைவேளை சமயத்துல நாம எல்லாரும் வாங்கி சாப்பிடுற ஒரு முக்கியமான நொறுக்கு தீனி பாப்கார்ன்தான். இது உங்க நேரத்த போக்கறதுக்கு மட்டுமான சிற்றுணவு (SNACKS-சரியா ..?) மட்டுமல்ல. உங்களது ஆரோக்கியத்திற்கு மிக அத்தியாவசியமான அநேக ஊட்டச்சத்துகள் இதில் அடங்கியுள்ளது.  
 
கொழுப்பு குறைந்த, அதிக நார் சத்துக்கள்  அடங்கிய பாப்கார்ன் ஒரு உன்னதமான பொருள் என்பது முன்னமே அறிந்த ஒரு உண்மையாகும். ஆனால் அறிவியலாளர்கள் பாப்கார்னின் கூடுதலான பலன்களையும் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ளவற்றை காட்டிலும் அதிக சத்துக்கள் பாப்கார்னில் இருக்கின்றதாம். 
புற்றுநோய், இதயநோய், மறதிநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்க பாப்கார்ன் பெரிதும் உதவுகின்றது. இதில் அடங்கியுள்ள ஆன்ட்டி ஆக்ஸைடன்ட் (Antioxidant) என்ற உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது. மேலும் உயிரணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகளை உடலுக்குள் வராமல் தடுக்கும் போளிபெனோல்ஸ் (Polyphenols) நிறைந்தது.
 
மற்ற தின்பண்டங்கள் போன்று இல்லாமல் முழுவதும் மக்கா சோளம் தானியம் மட்டுமே உபயோகித்து பாப்கார்ன் செய்யப்படுகிறது. ஒருநாளைக்கு ஒரு நபருக்கு தேவையான தானிய சத்தின் 70 சதவிகிதம் கொடுக்க பாப்கார்ன் உதவுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இது மிகச்சிறந்த ஒரு தானிய உணவு.
பாப்கார்னில் இயல்பாக சர்க்கரை இல்லாததால் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை பரிந்துரைக்கப்பட்டாலும், இப்போது விற்கும் பாப்கார்ன் தேங்காய் எண்ணெய், கேராமல், சாக்லேட்டு போன்றவற்றைச் சேர்த்துச் செய்வதால் அவை பெரும் தீங்கு விளைவிக்கக் கூடும்.  

 

  

 

 

 

 

 

 

 

 

 
 




 

 

 
 



 

.

வெள்ளி, மார்ச் 21, 2014

விடுகதை

இதோ உங்கள்  மூளைக்கு வேலை கொடுக்க சில நவீன விடுகதைகள்
(குறிப்பு - எல்லாம் கம்ப்யூட்டர் சம்பந்தமானவை)

1. தொட்டால் வாடும் பூ தொடாமல் மலரும் பூ.
2. கொக்கிபோட்டு இழுத்தால் கூட கூட வந்திடும்.
3. அத்தையை பார்த்ததும் நோய் சுத்தமாய் தீர்ந்தது.
4. கூன்விழுந்த கிட்டப்பாவை குழியில தள்ளிவிட்டாச்சு.
5. ஒருவர் பெற்ற பிள்ளைகள் எல்லாம் ஜன்னல் படியில்
6. இரும்பில் செய்யாத சாவி, துருபிடிக்காத சாவி
7. காப்பாத்த நான் வேண்டும். அனாலும் என்னை யாருக்கும் பிடிக்காது
8. நூற்றியொரு படிகள் ஏறி போனேன். ஊரெல்லாம் சுத்தி வந்தேன்.
9. எலி வீரனுக்கு முதுகில் தீ.
10. இதனை தொட்டால் மறையும் திரை
11. பட்டனை தட்டினேன். சேதி போய் சேர்ந்தது
12. அந்தகால  பயில்வான், இந்தகால நோஞ்சான்.



விடைகள் கீழே ................












1. ஸ்கிரீன் சேவர்
2. மவுஸ் பாயிண்டர்
3. ஆன்ட்டி வைரஸ்
4. ரிசைக்கிள் பின் FILES
5. விண்டோஸ்
6, பாஸ்வேர்ட்
7. ரிஸ்டார்ட்
8. கீ போர்ட்
9. ஒப்டிக்கல் மவுஸ்
10.குளோஸ் பட்டன்
11.ஈ மெயில்
12.மானிட்டர் (இப்ப FLAT)

புதன், மார்ச் 19, 2014

நினைவிருக்கட்டும்...

 



நீதிமான்களும் குற்றவாளிகளும் 
இடம் மாறி நிற்கும் 
வித்யாசமான நீதிமன்றம் இது  
பதில்தர முடியாத 
கேள்விக்கணைகள் தொடுத்து 
இரண்டுபக்கம் கூரான வாளினால்
உங்கள் முகவரியின் தலையறுக்க
ஆனந்தத்தின் அகலப்பாதையில்
ஏமாற்றங்களின் படிகள் ஏறிக்கடந்து
நம்பிக்கையின் விடியலை நோக்கி

நான் வருவேன்.......
 

செவ்வாய், மார்ச் 18, 2014

மாடிப்படி வாஸ்து

எனக்கு வாஸ்து சாஸ்திரம் என்ற வஸ்துவில் துளியும் நம்பிக்கை கிடையாது. ஆனால் இது மாடிப்படி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலும் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு உதவும் என்பதாலும் இந்த பதிவு.
 
 
 
இப்போது கட்டும் வீடுகள் பெரும்பாலும் அடுக்குமாடிகள் என்பதால் மாடிப்படிகள் முக்கியத்துவம் பெறுகிறது. மாடிப்படிகள் பல்வேறு வடிவங்களிலும், சிமெண்ட், இரும்பு அல்லது மரத்திலான படிகளாகவும் கட்டப்படுகிறது. இருந்தபோதிலும் நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் மாடிப்படியின் அமைப்பு வாஸ்து சாஸ்திர அமைப்புடன் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.  
 
 
மாடிப்படிகள் ஒரு வீட்டின் வாஸ்து தோஷத்தை நிர்ணயம் செய்கின்றது என எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா..?
 
 
சீன வாஸ்து சாஸ்திரம் பெங் சுயி நிபுணர்களின் கருத்துப்படி மாடிப்படிகள் வீட்டின் வாஸ்து தோஷத்தை கொடுப்பதில் / நீக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றது.
  

மாடிப்படிகள் எப்போதும் வீட்டின் மேற்கு திசையிலும் தெற்கு திசையிலும் மட்டுமே அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு திசையில் மாடிப்படிகள் அமைப்பது தோஷமாக மாறி உங்களுக்கு பண நஷ்டங்கள் ஏற்படுத்தி விடலாம்.

மாடிப்படிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படை எண்ணாக இருப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் "0" என முடியும் எண்ணிக்கையில் அதாவது10, 20, 30 என இருக்கக்கூடாது  

சுழல் மாடிப்படிகள் உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கலாம் என்பதால் தவிர்க்கவும் 

உடைந்த படிக்கட்டுகளை உடனடியாக செப்பனிட்டு சரி செய்ய வேண்டும்.


மாடிபடிக்கு கீழே குளியலறையோ, சமையலறையோ அல்லது பூஜை அறையோ அமைக்க கூடாது.



வீட்டின் நடுவே மாடிப்படி வைப்பது சரியானதல்ல என்றாலும் அதனால் தோஷம் எதுவும் இல்லை. ஆனால் அவ்வாறு வைக்கும் மாடிப்படியில் சரியான வளைவுகள் இல்லையென்றால் விபரீதமான பலன்களை கொடுக்கும். மாடிபடிகளுக்கு மேற்புறம் மின்விளக்கு அமைப்பதும் கூடாது.

 



 

புதன், மார்ச் 12, 2014

பாசவலை

ஆதரவின்மை என்ற துன்பச் சிறையுண்டு
அதனைக்கண்டு கலங்கும் மனமுண்டு 
கண்ணீர் விட்டு கதறி அழுவதை பார்க்கும்போது
கொஞ்சமாவது கண்கலங்க தோன்றுகின்றது 
துக்கம் புயலென தாக்கும்போது 
நெஞ்சு விம்மி வலிக்கின்றது.
நினைவுகளில் மட்டுமே இனி என்பதை மறந்து 
திரும்பிவர எத்தனிக்கையில் 
கொழுந்துவிட்டு எரியும் தீ தடுக்கின்றது 
மறந்திடுவாயோ என்றெண்ணும்போது 
உடலைவிட அதிகமாய் உள்ளம் தகிக்கின்றது
விட்டுச்செல்லும் உறவுகள்
தீர்ந்து போன சோகங்கள்
அடுத்த ஜென்மத்திலாவது 
எதுவும் அறியாமல் எதற்கும் ஆசைபடாமல்
சொந்தங்களின் பந்தச்சிறையில்
அகபட்டுக்கொள்ளாமல் இருக்க 
எதையும் தாங்கும் இதயமொன்று கொடுத்தருள் இறைவா
என்பதே சாம்பலாய் மாறும்வரை 
இருக்கும் மிச்சநேர பிரார்த்தனை
என்னதான் இருக்கட்டுமே
மண்குடத்திலிருந்து நீரில் விழுந்து 
கலந்து சங்கமிக்கும் போதுதான் அமைதி 
இல்லையென்றால் அடங்காத அந்த பாசம் 
இந்த சாம்பலை உயிர்த்தெழ செய்தாலும் செய்திடும்  

 

கேள்விக்கென்ன பதில்?

உங்களிடம் ஒரு குழப்பமான கேள்வி கேட்கட்டுமா..................?

ஒரு கிராமத்தில் மூன்று நண்பர்கள் இருந்தனர். உங்கள் குழப்பத்தை குறைத்திட உதவியா அவங்க பெயர் ராமு, சோமு, பாலு என்று வைத்துக்கொள்வோம். இவர்களில் ராமு பிறவியிலேயே பார்வையற்றவன்.சோமுவுக்கு சுத்தமா காது கேட்காது. மூன்றாமவன் பாலு பிறவி ஊமை.
 
மூணு பேரும்  சேர்ந்து வியாபாரம் பண்ணி நல்லா சம்பாதிச்சு ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் குருடன் ராமு சேர்த்து வச்சிருந்த பணத்தையெல்லாம் அவனுக்கு தெரியாம (??) திருடிக்கொண்டு செவிடன் சோமு எஸ்கேப் ஆகுறான்.  
ஏதேச்சையா அந்தப்பக்கம் வந்த பாலு (ஊமை) இதை பார்த்துட்டான். சைகை காட்டி கூப்பிட்டு உதவி கேட்க பக்கத்தில வேற யாருமே இல்லாத காரணத்தால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் எப்படி தன் நண்பன் ராமுவுக்கு பணப்பை திருடு போன விஷயத்தை சொல்லுவான்? இதுதான் அந்த கேள்வி.
 
இதே கதை கொஞ்சம் பெரிய, சிறிய வித்தியாசங்களுடன் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் கேள்வி  மட்டும் பொதுவானது. பிறவியிலேயே வாய்பேச முடியாத ஒருவர் எப்படி ஒரு குருடனிடம் ஒரு விஷயத்தை சொல்லி புரியவைப்பான்?
 
மிகச்சரியான விடைதான் வேண்டும் என்று கேட்கவில்லை. கண்டிப்பாக பல விடைகள் கிடைக்கலாம். ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் வேறு கருவிகளை உபயோகிக்காமல் ஊமையான பாலு தன் நண்பனுக்கு உதவ முடியுமா? என்பதுதான் என் கேள்வி!
 
இந்த கேள்விக்கு என்னவெல்லாம் பதிலாக வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்